ரஜினி படம் திரையிட எதிர்ப்பு.. 'கபாலி' போஸ்டர் எரிப்பு... பெங்களூரில் பரபரப்பு !
பெங்களூர்: கர்நாடக மாநிலத்தில் ரஜினியின் கபாலி படம் திரையிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது பட போஸ்டர்களை தீயிட்டு எரித்த கன்னட சலுவளி கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜ் உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர்.
ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி, ராதிகா ஆப்தே, தன்ஷிகா, கலையரசன், தினேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'கபாலி'. நேற்று தமிழகம், கர்நாடகம் உள்பட இந்தியா முழுவதும் வெளியானது.

இந்த படம் கர்நாடகத்தில் பெங்களூரு, மைசூரு, உப்பள்ளி, பல்லாரி, சிவமொக்கா, கோலார், கோலார் தங்கவயல், மங்களூரு, ராமநகர் உள்பட பல்வேறு பகுதிகளில் முதல் முறையாக சுமார் 300 திரையரங்குகளில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் ரஜினியின் கபாலி படம் கர்நாடகாவில் திரையிடப்பட்டதற்கு கன்னட சலுவளி கட்சியினர் எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். வாட்டாள் நாகராஜ் தலைமையில் திரண்ட அக்கட்சியினர் பெங்களூரில் கபாலி படம் திரையிடப்பட்ட தியேட்டர் முன்பு கபாலி பட போஸ்டரை தீ வைத்து கொளுத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
அப்போது பேசிய வாட்டாள் நாகராஜ் பேசியதாவது: கர்நாடக திரைப்பட வர்த்தக சபையின் விதிமுறைகளை மீறி கர்நாடகாவில் 300 திரையரங்குகளில் கபாலி திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது கண்டனத்துக்குரியது. கர்நாடக மாநிலத்தில் பிற மொழி திரைப்படங்கள் திரைக்கு வந்து 4 வாரங்கள் கழித்துதான் திரையிட வேண்டும் என்று கர்நாடக வர்த்தக சபையில் விதிமுறை வகுக்கப்பட்டுள்ளது. அது மீறப்பட்டுள்ளது.
பெங்களூருவில் கழிவறை சுவர் தவிர பிற கட்டிடங்களில் கபாலி சுவர் விளம்பரம் எழுதப்பட்டுள்ளது. இதை இப்படியே விட்டால் கழிவறையை கூட திரையரங்கமாக மாற்றிவிடுவார்கள் என்று ஆவேசத்துடன் கூறினார்.
-
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications