கட்டண உயர்வை கண்டித்து கேரளா, டெல்லி, உ.பி.யில் ரயில் மறியல்!!
டெல்லி; ரயில் கட்டணங்களை உயர்த்திய மத்திய அரசை கண்டித்து டெல்லி, கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் போராட்டம் வலுத்துள்ளது.
பயணிகள் ரயில் கட்டணங்களை 14.2 சதவீதம் அதிகரித்து ரயில்வே துறை நேற்று உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து பல மாநிலங்களிலும் கட்டண உயர்வை திரும்ப பெற கோரி போராட்டங்கள் வெடித்துள்ளன.
டெல்லியில் இன்று மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் அரவிந்தர் சிங் தலைமையில் அக்கட்சியினர் போராட்டம் நடத்தினர். போராட்டம் தீவிரமடைந்ததையடுத்து போலீசார் தண்ணீரை பீய்ச்சி அடித்து காங்கிரஸ் தொண்டர்களை கலைத்தனர்.
போராட்டத்துக்கு புகழ்பெற்ற கேரளாவிலும் ரயில் கட்டண உயர்வு பிரச்சினை அதிர்வை ஏற்படுத்தியது. கேரள காங்கிரசின் இளைஞர் பிரிவினர் எர்ணாக்குளம் மாவட்டத்தில் ரயில் மறியல் போராட்டம் நடத்தினர்.
திருவனந்தபுரம் ரயில் நிலையத்திலும் காங்கிரசார் போராட்டங்களில் ஈடுபட்டனர். அவர்களை காவல்துறை கைது செய்தது. இடதுசாரி கட்சிகளின் இளைஞர் பிரிவினரும் திருவனந்தபுரத்தில் போராட்டம் நடத்தி ரயில் மறியல் செய்தனர்.
உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத்தில் சமாஜ்வாதி கட்சியினர் ரயில் மறியலில் ஈடுபட்டதுடன், மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். ரயில் மறியலில் ஈடுபட்டோரை போலீசார் கைது செய்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications