சேவிங்ஸ் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு தளர்வு... ஒரே நாளில் ரூ.24000 எடுக்க முடிந்ததா?
சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் ஏடிஎம்களில் ஒரே முறையில் 24000 ரூபாய் வரை எடுக்கலாம் என ரிசர்வ் வங்கி நேற்று அறிவித்தது. இதனால் இன்று வங்கிகளில் கூட்டம் குறைந்தே காணப்பட்டத
டெல்லி: சேமிப்பு கணக்கு வைத்துள்ளவர்கள் ஒரே நாளில் ஏடிஎம் 24000 ரூபாய் எடுக்கலாம் என ரிசர்வ் வங்கி நேற்று அறிவித்தது. இதனால் கடந்த 2 மாதங்களை காட்டிலும் இஙனறு வங்கிக்கு குறைந்தளவு மக்களே வந்ததாக வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மத்திய அரசு கடந்த நவம்பர் 8ஆம் தேதி 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தது. புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளையும் மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.
கறுப்புப்பணம் மற்றும் கள்ள நோட்டை ஒழிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. வங்கிகள் மற்றும் ஏடிஎம்களில் பணம் எடுக்கவும் வங்கிகளில் பணத்தை டெப்பாசிட் செய்யவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

2 மாதங்களாக நிரம்பி வழிந்த கூட்டம்
இதனால் வங்கி மற்றும் ஏடிஎம்களில் கூட்டம் 2 மாதமாக நிறைந்து காணப்பட்டது. ஏடிஎம்களில் நாள் ஒன்றுக்கு 2500 ரூபாய் எடுக்கவும் வாரத்திற்கு அதிகபட்சமாக 24000 ரூபாய் வரை பெறவும் முடிந்தது.

ஒரே நாளில் ரூ.24000
ஜனவரி மாதத்தில் இருந்து நாள் ஒன்றிற்கு ஏடிஎம்களில் 10000 எடுக்கலாம் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று முதல் நாள் ஒன்றிற்கு எடிஎம்களில் இருந்து நாள் ஒன்றுக்கு 24000 ரூபாய் எடுத்துக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.

உச்சவரம்பில் மாற்றமில்லை
அதே நேரத்தில் அதிகபட்ச உச்சவரம்பு ரூ.24,000 என்பதில் எந்த மாற்றுமும் இல்லை என்று அறிவிக்கப்பட்டது. ஒரு வாரத்தில் எடுக்க வேண்டிய பணத்தை ஒரே நாளில் எடுத்துக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது.

வங்கிகளில் குறைந்த கூட்டம்
இதனால் 2 மாதங்களுக்குப் பிறகு இன்று வங்கிகளில் கூட்டம் குறைந்து காணப்பட்டது. வாடிக்கையாளர்கள் தேவையான அளவு பணம் எடுக்க முடிந்ததால் வங்கிகளுக்கு வரும் கூட்டம் குறைந்திருப்பதாக வங்கி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications