பரோல் மனு பரிசீலனையில் உள்ளது.. சசிகலாவுக்கு நாளைக்கு பரோல் கிடைக்கலாம்.. புகழேந்தி சொல்கிறார்
பெங்களூர்: சசிகலாவுக்கு நாளை பரோல் கிடைத்துவிடும் வாய்ப்பு உள்ளது என்று கர்நாடக அதிமுக செயலாளரும், தினகரன் ஆதரவாளருமான புகழேந்தி தெரிவித்துள்ளார்.
கணவர் நடராஜன் உடல்நிலை மோசமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அவரை சந்திக்க, 15 நாட்கள் பரோல் கேட்டு சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று, பெங்களூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள, சசிகலா விண்ணப்பித்திருந்தார்.

இவரது பரோல் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் இன்று மாலை செய்தி வெளியிட்டிருந்தது. இதுகுறித்து டிவி சேனல் ஒன்று புகழேந்தியை தொடர்பு கொண்டு கேட்டபோது, ஏதோ அறைக்குள் உட்கார்ந்து கொண்டு இப்படி செய்தி வெளியிடாதீர்கள் என சீறினார். மேலும், எந்த ஏஜென்சி இந்த செய்தியை வெளியிட்டது என்றும் கேட்டார்.
ஏஎன்ஐ செய்தி நிறுவனம்தான் வெளியிட்டது என செய்தியாளர் கூறியபோதும் அதை ஏற்க மறுத்த புகழேந்தி, இன்று மாலை கூட போலீஸ் அதிகாரிகளிடம் பேசியதாகவும், இன்னும் பரோல் விண்ணப்பம் பரிசீலனையில் உள்ளதாகவும், புதன்கிழமை (நாளை) பரோலுக்கு அனுமதி கிடைக்க வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்தார்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications