காஷ்மீரில் ஜேஇஎம் வெறியாட்டம்.. தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட கார் உரிமையாளர் கண்டுபிடிப்பு

புல்வாமா தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் உரிமையாளர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    உளவு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது | புல்வாமா கார் ஓனர் கண்டுபிடிப்பு- வீடியோ

    ஜம்மு: 40 வீரர்கள் கொல்லப்பட்ட தாக்குதலுக்கு உபயோகப்படுத்தப்பட்ட கார் யாருடையது? அந்த காரின் உரிமையாளர் யார் என்பதையும் தேசிய புலனாய்வு படை அதிகாரிகள் தற்போது கண்டுபிடித்துள்ளனர்.

    புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-ம் தேதி சிஆர்பிஎப் படை வீரர்கள் வந்த வாகனம் மீது கார்குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.

    இதில் கிட்டத்தட்ட 40-க்கும் மேற்பட்ட வீரர்கள் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் இந்த தாக்குதல் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது பற்றிய விசாரணை அந்த கணமே ஆரம்பமானது.

    தேசிய புலனாய்வு படை

    தேசிய புலனாய்வு படை

    தாக்குதல் நடத்திய காரில் 1000 கிலோ வெடிப்பொருட்கள் நிரப்பப்பட்டுதான் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்பட்டது. இருந்தாலும் இது சம்பந்தமான விசாரணையை தேசிய புலனாய்வு படை அதிகாரிகள் தீவிரப்படுத்தினார்கள். சம்பவ இடத்துக்கே நேரடியாக சென்று ஆய்வு நடத்தினர்.

    கார்குண்டு

    கார்குண்டு

    அப்போது, சுமார் 370 கிலோ ஆர்டிஎக்ஸ் மருந்து வெடிப்பொருட்கள் பயன்படுத்தியே இந்த தாக்குதல் நடந்தது என அதிகாரிகள் உறுதியாக சொன்னார்கள். அந்த கார்குண்டு தாக்குதல் நடத்தியவன் பெயர் ஆதில் என்பதும், இப்படி ஒரு தாக்குதலை நடத்துவதற்காக 3 முறை ஒத்திகையும் செய்து பார்த்தாகவும் தகவல்கள் வெளிவந்தன.

    ஆட்டோமொபைல் நிபுணர்

    ஆட்டோமொபைல் நிபுணர்

    இந்நிலையில், கொடூர தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட அந்த கார், அந்த காரின் ஓனர் யார் என்பதை தடயவியல் நிபுணர்கள் மற்றும் ஆட்டோமொபைல் நிபுணர்கள் கண்டுபிடித்துவிட்டார்கள்.

    சாஜத் பட்

    சாஜத் பட்

    தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட கார், மாருதி ஈகோ ரகத்தை சேர்ந்ததாம். இந்த காரின் எஞ்சின், சேஸ் நம்பரை வைத்து உரிமையாளர் யார் என்பதை தேடும் பணி ஆரம்பமானது. கிட்டத்தட்ட 7 பேரிடம் கைமாறி கடைசியாக அந்த கார், சாஜத் பட் என்பவரிடம் வந்து சேர்ந்திருக்கிறது.

    கூடுதல் விவரம்

    கூடுதல் விவரம்

    தாக்குதல் நடத்தியபோது இந்த காரின் ஓனர் இவர்தான். ஜம்மு-காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பிஜ்பேஹாரா என்ற பகுதியை சேர்ந்தவர் இவர் என்பதும், ஜெய்ஷ்-இ-முஹம்மது என்ற பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவர் என்பதும் கூடுதல் விவரங்களாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    போட்டோக்களுக்கு போஸ்

    போட்டோக்களுக்கு போஸ்

    தாக்குதல் நடந்ததிலிருந்தே இவர் தலைமறைவாக இருந்து வந்திருக்கிறார். ஆனால் இதற்கு முன்பு கையில் ஆயுதங்களை ஏந்தியபடி நிறைய போட்டோக்களுக்கு போஸ் கொடுத்து இணையத்தில் பதிவு செய்துள்ளதையும் அதிகாரிகள் விசாரணையில் கண்டறிந்துள்ளனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+