10 வயது பள்ளிச் சிறுமிகளை பலாத்காரம் செய்த 58 வயது ஐஏஎஸ் அதிகாரி.... கைது!
புனே: மகாராஷ்டிரா மாநிலத்தில் 10 வயதிற்குட்பட்ட பள்ளி சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக எழுந்த புகாரின் பேரில் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரியை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எம்.ஹெச்.சாவந்த் என்ற அந்த ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு 58 வயதாகிறது. மகராஷ்டிராவின் விவசாய ஆராய்ச்சி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக உள்ள அந்த அதிகாரி பள்ளி மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்தது.
8 முதல் 10 வயது வரை உள்ள அந்த சிறுமிகள் கொடுத்த புகாரின் பேரில் ஐ.ஏ.எஸ் அதிகாரி சாவந்தை புனே போலீசார் கைது செய்துள்ளனர்.

ஐ.ஏ.எஸ் அதிகாரி மீதி குழந்தைகள் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரி சுதாகர் பதாரே தெரிவித்துள்ளார்.
ஐ.ஏ.எஸ் அதிகாரி மூலம் தொடர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டது பற்றி சிறுமிகள் ஆசிரியையிடம் புகார் அளித்துள்ளனர். அவர் பள்ளி முதல்வருக்கு புகார் அளிக்கவே இந்த சம்பவம் வெளிச்சத்து வந்துள்ளது.
பள்ளி முதல்வர் போலீசுக்கு அளித்த புகாரின் பேரில் போலீசார் ஐ.ஏ.எஸ் அதிகாரியை கைது செய்துள்ளனர்.
1998 ஆம் ஆண்டு பேட்ச்சை சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரியான சாவந்த் மராட்டிய மாநிலத்தில் விளையாட்டு, சமூகநலம், விவசாயத்துறை என பல்வேறு துறைகளில் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
58 வயதாகும் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர் சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டிருப்பது மராட்டிய மாநிலத்தில் பெரும் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியுள்ளது.












Click it and Unblock the Notifications