கைக்கொடுத்த ‛ட்ரீம் 11’.. ரூ.1.5 கோடி ‛அப்பே’.. ஒரே நாளில் கோடீஸ்வரான எஸ்ஐ.. கடைசியில் சஸ்பெண்ட்
புனே: புனேவை சேர்ந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ‛ட்ரீம் 11' விளையாடி ரூ.1.5 கோடி வென்ற நிலையில் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இந்த சஸ்பெண்ட் நடவடிக்கையின் பின்னணி குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
‛ட்ரீம் 11' இன்றைய நாளில் நாம் அதிகமாக கேள்விப்படும் வார்த்தைகளில் இதுவும் ஒன்றாகும். இதுபற்றி ஒரு தரப்பினருக்க நன்கு தெரிந்திருக்கும். இன்னொரு தரப்பினருக்கு தெரியாமல் இருக்கலாம். அதாவது ‛ட்ரீம் 11' என்பது செயலியை அடிப்படையாக கொண்ட ஒரு விளையாட்டாகும்.

இந்த செயலியை டவுன்லோட் செய்து கொண்டு ஒவ்வொரு நாளும் நடக்கும் கிரிக்கெட், ஹாக்கி, கால்பந்து போட்டிகளில் பங்கேற்க முடியும். உதாரணமாக கிரிக்கெட்டை எடுத்து கொண்டால் அன்றைய தினம் எந்த வீரர்கள் அணியில் இடம்பெற்று நன்றாக விளையாடுவார்கள் என்பதை நாம் தேர்வு செய்ய வேண்டும்.
நாம் தேர்வு செய்யும் அணி வீரர்கள் நன்றாக விளையாடும்பட்சத்தில் அதற்கு ஏற்ப நமக்கு பணம் கிடைக்கும். முன்னதாக நாம் இந்த போட்டியை விளையாடும்போது கட்டணமாக பணம் செலுத்த வேண்டும். இது ரூ.10 முதல் ரூ.10 ஆயிரம் வரை செல்லும். இந்த ட்ரீம் 11 போட்டியில் நாம் குழுவாகவும் தனியாகவும் பங்கேற்றலாம். இது ஒருவகையான சூதாட்டம் என பலரும் குற்றம்சாட்டிய நிலையில் தான் அதனை ஏற்க நீதிமன்றம் மறுத்துள்ளது.
அதாவது இது அறிவை பயன்படுத்தி விளையாடக்கூடிய விளையாட்டு என நீதிமன்றம் கூறியதால் இன்னும் இது நடைமுறையில் உள்ளது. மேலும் இந்திய முன்னாள் கேப்டன் டோனி, தற்போதைய கேப்டன் ரோகித் ஷர்மா உள்ளிட்டவர்கள் இதன் விளம்பரத்தி வருகின்றனர். இதனால் அதிகமானவர்கள் ‛ட்ரீம் 11' விளையாடி வருகின்றனர்.
அப்படி ‛ட்ரீம் 11' போட்டியில் பங்கேற்பதில் ஆர்வம் கொண்டவர் தான் சோம்நாத் ஜெண்டே. இவர் புனேவில் சப்-இன்ஸ்பெக்டராக பணி செய்து வந்தார். இவரும் ஒவ்வொரு போட்டியின்போது ட்ரீம் 11-ல் பணம் செலுத்தி விளையாடி வந்தார். தற்போது உலககோப்பை போட்டி நடப்பதால் அதில் மும்முரமாக ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில் தான் ட்ரீம் 11 ல் சோம்நாத் ஜெண்டே சரியான கணித்து ரூ.1.5 கோடி வென்றார். அதாவது உலககோப்பை போட்டியில் இங்கிலாந்து-வங்கதேசம் அணிகள் மோதிய போட்டியில் தான் அவர் இந்த பரிசுத்தொகையை வென்றார். இதன்மூலம் ஒரே நாளில் அவர் கோடீஸ்வரராக மாறியுள்ளார். இதையடுத்து அவர் உற்சாக மிகுதியில் ட்ரீம் 11 குறித்து பல பேட்டிகளை கொடுத்தார்.
அப்போது அவர் போலீஸ் சீருடையிலேயே தோன்றினார். மேலும் அவர் பணி நேரத்தில் ட்ரீம் 11 விளையாடியதும் தெரியவந்தது. இதுபற்றி அறிந்த மகாராஷ்டிரா போலீஸ் நிர்வாகம் சோம்நாத் ஜெண்டேவை அதிரடியாக சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது. இதுபோன்ற விஷயங்கள் போலீஸ் விசாரணையில் உறுதியான நிலையில் இந்த சஸ்பெண்ட் நடவடிக்கை நேற்று மேற்கொள்ளப்பட்டது.
இதுபற்றி காவல் துறை துணை ஆணையர் ஸ்வப்னா கோர் கூறுகையில், ‛‛விசாரணையில் அவர் அனுமதியின்றி ட்ரீம் 11 விளையாடியதோடு, போலீஸ் உடையில் பேட்டி அளித்துள்ளார். இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் பிற போலீசார் இப்படி செய்யாமல் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. மாறாக ஆன்லைன் கேம்கள் விளையாடினால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.
-
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications