காங். ஆளும் பஞ்சாப், சத்தீஸ்கரில் முதல்வர்களுக்கு எதிராக போர்க்கொடி- பஞ்சாயத்தில் ராகுல் பிஸியோ பிஸி
ராய்ப்பூர்/அமிர்தசரஸ்; காங்கிரஸ் கட்சி ஆளும் பஞ்சாப் மற்றும் சத்தீஸ்கரில் அம்மாநில முதல்வர்களான அமரீந்தர்சிங் மற்றும் பூபேஷ் பாகல் ஆகியோருக்கு எதிராக கேபினட் அமைச்சர்களே போர்க்கொடி தூக்கியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து இரு மாநில ஆட்சிகளைத் தக்க வைக்க சமாதான முயற்சிகளில் தீவிரமாக இறங்கி உள்ளார் மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.
பஞ்சாப், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் அடுத்த 6 மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளில் மும்முரமாக இறங்கி உள்ளன.
பஞ்சாப்பில் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவராக முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத்சிங் சித்து நியமிக்கப்பட்டார். ஆனால் சித்துவின் நியமனம் அவ்வளவு எளிதாக நடந்துவிடவும் முல்லை. சித்துவுக்கு துணை முதல்வர் பதவி தர வேண்டும்; மாநில தலைவராக்க வேண்டும் என்ற காங்கிரஸ் மேலிடத்தின் முடிவுகளை மிக கடுமையாக எதிர்த்தார் முதல்வர் அமரீந்தர்சிங்.

சித்துவுக்கு எதிர்ப்பு
முதல்வர் அமரீந்தர்சிங்கின் இந்த எதிர்ப்பால் காங்கிரஸ் மேலிடம் அதிர்ந்து போனது. பல மாதங்களாக இருதரப்பினரையும் அழைத்து பேசியது காங்கிரஸ் மேலிடம். பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி என அனைவரும் இந்த விவகாரத்தில் தலையிட்டு ஒருவழியாக முடிவுக்கு கொண்டு வந்தனர். சித்துவும் பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராகிவிட்டார்.

இப்போது அமரீந்தர்சிங்குக்கு எதிர்ப்பு
இப்போது முதல்வர் அமரீந்தர்சிங்குக்கு எதிராக 4 அமைச்சர்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர். சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில் முதல்வர் அமரீந்தர்சிங் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை; அதனால் அவரை மாற்ற வேண்டும் என்பது இந்த 4 அமைச்சர்களின் கோரிக்கை. இதனைத் தொடர்ந்து பஞ்சாப் காங்கிரஸ் விவகாரங்களுக்கான மேலிடப் பொறுப்பாளர் ஹரீஷ் ராவத்தை சந்தித்துப் பேச 4 அமைச்சர்களும் உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் சென்றுள்ளனர். இந்த சந்திப்புக்குப் பின்னர் டெல்லியில் சோனியா, ராகுல் காந்தி ஆகியோரையும் அதிருப்தி அமைச்சர்கள் சந்தித்துப் பேச இருக்கின்றனர்.

அதிகரிக்கும் அதிருப்தி எம்.எல்.ஏக்கள்
அத்துடன் 4 அமைச்சர்களுக்கு ஆதரவாக 10க்கும் ஏற்பட்ட எம்.எல்.ஏக்களும் அணிதிரண்டுள்ளனர். இந்த அதிருப்தி எம்.எல்.ஏக்கள் ஒன்று கூடி ஆலோசனை நடத்தினர். இந்த கூட்டத்திலும் முதல்வர் அமரீந்தர்சிங்கை மாற்ற வேண்டும் என டெல்லி மேலிடத்தை வலியுறுத்த முடிவு செய்துள்ளனர். இதனால் பஞ்சாப் காங்கிரஸில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

சத்தீஸ்கர் முதல்வருக்கு எதிராக போர்க்கொடி
இதேபோல் சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகலுக்கும் எதிர்ப்பு எழுந்துள்ளது. சத்தீஸ்கர் முதல்வராக பூபேஷ் பாகல் பதவியேற்று இரண்டரை ஆண்டுகள் முடிந்துவிட்டன. இப்போது மூத்த அமைச்சர் டி.எஸ்.சிங். தியோ தம்மை முதல்வராக்க வேண்டும் என போர்க்கொடி தூக்கி இருக்கிறார். சத்தீஸ்கரில் காங்கிரஸ் அரசு அமைந்த போது இரண்டரை ஆண்டுகள் சுழற்சி முறையில் முதல்வர் பதவி வழங்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது என்கிறார் டி.எஸ். சிங் தியோ. ஆனால் அப்படி எந்த ஒப்பந்தம் போடப்படவில்லை என்கிறார் முதல்வர் பூபேஷ் பாகல்.

அமைச்சரவையில் பிளவு
இதனையடுத்து பூபேஷ் பாகல், டி.எஸ்.சிங் தியோ இருவரையும் அழைத்து பேசியுள்ளார் ராகுல் காந்தி. இருந்தபோதும் தமது கோரிக்கையை காங்கிரஸ் மேலிடம் நிராகரித்துவிட்டால் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வது என்கிற முடிவில் இருக்கிறாராம் டி.எஸ்.தியோ சிங். ஏற்கனவே சத்தீஸ்கர் மாநில அமைச்சரவையில் பூபேஷ் பாகல் கோஷ்டி; தியோ சிங் கோஷ்டி என பிரிந்து பரஸ்பரம் குற்றச்சாட்டுகளை பொதுவெளியில் கூறி வருகின்றனர். இதனால் சத்தீஸ்கரிலும் ஆளும் காங்கிரஸ் கட்சி கடும் நெருக்கடியை எதிர்கொண்டிருக்கிறது.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications