பஞ்சாப் அரசில் உச்சகட்ட மோதல்.. உள்ளாட்சி துறையை பறித்த முதல்வர்.. விடமாட்டேன்.. சித்து ஆவேசம்
சண்டிகர்: பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் மற்றும் அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்து நடுவேயான மோதல் அதிகரித்து உள்ளது.
சித்துவிடம் இருந்த உள்ளாட்சி அமைச்சக பொறுப்பை முதல்வர் பறித்துக் கொண்டு உள்ளார். பஞ்சாப் மாநிலத்தில் அம்ரிந்தர் சிங் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. நடைபெற்று முடிந்த லோக்சபா தேர்தலில் மொத்தமுள்ள 13 தொகுதிகளில் 8 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றிபெற்றது.

பஞ்சாபில் போதிய அளவுக்கு காங்கிரஸ் சிறப்பாக செயல்படாததற்கு, நவ்ஜோத் சிங் சித்து, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பதவியேற்பு விழாவில் பங்கேற்க சென்று, அந்த நாட்டு ராணுவ தளபதியை கட்டியணைத்தது உள்ளிட்ட சில சம்பவங்கள் தான் காரணமாக அமைந்து விட்டது என்று முதல்வர் அமரீந்தர் சிங் பகிரங்கமாக குற்றம் சாட்டி இருந்தார். ஆனால் சித்து இதை மறுத்தார்.
இந்த நிலையில் முதல்வர் தலைமையில் இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தை, நவ்ஜோத் சிங் சித்து புறக்கணித்துவிட்டார். அதற்கு பதிலாக, செய்தியாளர்களை சந்தித்த அவர், சில புள்ளி விபரங்களை வெளியிட்டு நகர்ப்புறங்களில் காங்கிரஸ் சிறப்பாக செயல்பட்டுள்ளதாக பேட்டியளித்தார்.
முதல்வர் தன்னை பற்றி அவதூறாக கருத்துக்களை தெரிவிப்பதாகவும், ஆனால் தேர்தல் முடிவுகள் தனது சிறப்பான பணியை எடுத்துக்காட்டுவதாக உள்ளதாகவும் தெரிவித்தார் சித்து.
இந்த நிலையில் அமரீந்தர் சிங்கின், அடுத்த கட்ட நடவடிக்கையாக நவ்ஜோத் சிங் சித்துவிடம் இருந்த, முக்கியமான, உள்ளாட்சி துறை பொறுப்பை பிடுங்கிக் கொண்டு உள்ளார். அதேநேரம், சுற்றுலாத்துறை இன்னமும் சித்து வசம்தான் உள்ளது. அந்தத் துறையை தன்வசம் வைத்துக் கொள்வதாக முதல்வர் அமரீந்தர் சிங், ஆளுநருக்கு இன்று, வழங்கியுள்ள பரிந்துரையில் தெரிவித்துள்ளார்.
இந்த முடிவுக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த நவ்ஜோத் சிங் சித்து, இந்த விவகாரத்தை சாதாரணமாக எடுத்துக் கொள்ளப் போவதில்லை.. பஞ்சாப் மக்களுக்கு நான் பதில் சொல்ல வேண்டிய இடத்தில் இருக்கிறேன், என்று காட்டமாக தெரிவித்தார் .
இவ்வாறு முதல்வருக்கும், அமைச்சர் சித்துவிற்கும் கடுமையான மோதல் போக்கு உச்ச கட்டத்தை எட்டியுள்ளது. முன்னதாக நிருபர்களிடம் பேசிய சித்து மனைவி நவ்ஜோத் கவுர், அமைச்சரவை கூட்டத்திற்கு நவ்ஜோத் சிங் சித்துவுக்கு, அழைப்பு வரவில்லை என்று குற்றம் சாட்டி இருந்தார்.
பாஜகவில் இருந்து காங்கிரஸ் கட்சிக்கு வந்த நவ்ஜோத் சிங் சித்துவிற்கு, காங்கிரஸ் தேசிய தலைவர்களான ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோருடன் நல்ல தொடர்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகா புதிய முதலமைச்சராக இன்று பதவியேற்கிறார் டிகே சிவக்குமார் -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை












Click it and Unblock the Notifications