சர்ச்சை கருத்து: பஞ்சாப் காங். தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவின் ஆலோசகர் மால்விந்தர் சிங் ராஜினாமா
சண்டிகர்: பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவின் ஆலோசகர் மால்விந்தர் சிங் மாலி தனது பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார். காஷ்மீர் குறித்தும், தாலிபான்கள் குறித்தும் இவர் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நிலையில் தற்போது ராஜினாமா செய்துள்ளார்.
பஞ்சாப் காங்கிரஸ் கட்சிக்குள் இன்னும் கோஷ்டி மோதல் முடிவிற்கு வந்ததாக தெரியவில்லை. அங்கு முதல்வர் அம்ரீந்தர் சிங்கிற்கும், கட்சித் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவிற்கும் இடையில் தொடர்ந்து உரசல் நிலவி வருகிறது. கடந்த ஜூலை மாதம்தான் பெரிய உரசல் மற்றும் கோஷ்டி மோதலுக்கு பின்பாக நவ்ஜோத் சிங் சித்து பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவரானார்.

இதையடுத்து நவ்ஜோத் சிங் சித்து தனது ஆலோசகர்களாக மால்விந்தர் சிங் மாலி, லால் கார்க் ஆகியோரை நியமனம் செய்தார். தலைவராக நியமிக்கப்பட்ட இரண்டு நாட்களிலேயே தனக்கு என்று இரண்டு ஆலோசகர்களை நியமித்துக் கொண்டார். இரண்டு ஆலோசகர்களும் தொடக்கத்தில் இருந்தே நவ்ஜோத் சிங் சித்துவிற்கு எதிராக கருத்து தெரிவித்து வந்தனர்.
வாய்ப்பு கிடைக்கிற போதெல்லாம் அம்ரீந்தர் சிங்கிற்கு எதிராகவும் அவரின் ஆதரவாளர்களுக்கு எதிராகவும் நவ்ஜோத் சிங் சித்துவின் ஆலோசகரான மால்விந்தர் சிங் மாலி பேசி வந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் மால்விந்தர் சிங் மாலி தனது பேச்சில், காஷ்மீரில் இந்தியா, பாகிஸ்தான் இரண்டுமேதான் ஆக்கிரமிப்பு செய்துள்ளது. இரண்டு நாடுகளுமே அங்கு விதிமுறையை மீறி ஆக்கிரமிப்பு செய்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் சீக்கியர்கள், இந்துக்களின் பாதுகாப்பிற்கு தாலிபான்தான் பொறுப்பு. தாலிபான்கள் தங்கள் நாட்டை முன்னேற்றுவார்கள். தாலிபான்கள் முன்பு போல இருக்க மாட்டார்கள் என்று நம்புவோம் என்று மால்விந்தர் சிங் மாலி குறிப்பிட்டு இருந்தார். இவரின் இந்த கருத்து பெரிய சர்ச்சையானது. மால்விந்தர் சிங் மாலிக்கு எதிராக பலரும் இணையத்தில் கடுமையாக விமர்சனங்களை வைத்து இருந்தனர்.
முக்கியமாக அம்ரீந்தர் சிங்கின் ஆதரவாளர்கள் சித்துவிற்கு எதிராக மால்விந்தர் சிங் மாலியின் பேச்சை பகடைக்காயாக பயன்படுத்திக்கொண்டு கடுமையாக விமர்சனங்களை வைத்து வந்தனர். அம்ரீந்தர் மற்றும் சித்து இடையிலான மோதலை இது மேலும் அதிகப்படுத்தியது. இந்த நிலையில்தான் சித்துவின் அரசியல் ஆலோசகர் பதவியில் இருந்து மால்விந்தர் சிங் மாலி பதவி விலகி உள்ளார்.
சீக்கியர்களுக்கு எதிரான அமைப்புகள் எனக்கு எதிராக செயல்படுகின்றன. பஞ்சாபிற்கு எதிரான இயக்கங்கள், தீய சக்திகள் எனக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றன. எனக்கு எதிராக வெறுப்பு பிரச்சாரம் செய்கிறார்கள். என்னுடைய பாதுகாப்பிற்கு ஏதாவது ஏற்பட்டால் அம்ரீந்தர் சிங், விஜய் இந்தர் சிங், மனிஷ் திவாரி, சுக்பீர் பாதல், பிக்ரம் மஜிதியா ஆகியோர்தான் காரணம், என்று மால்விந்தர் சிங் மாலி தனது ராஜினாமாவிற்கு பின் குறிப்பிட்டுள்ளார்.
-
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications