பஞ்சாப்பில் மருந்து வாங்க போன விவசாயி.. 4 மணி நேரத்தில் கோடீஸ்வரர் ஆனார்.. அடித்த ஜாக்பாட்
அமிர்தசரஸ்: பஞ்சாப்பில் மருந்து வாங்குவதற்காக, மருத்து கடைக்குச் சென்ற விவசாயி, லாட்டரி வாங்கிய நிலையில், அடுத்த 4 மணி நேரத்தில் கோடீஸ்வரர் ஆகி உள்ளார். அவருக்கு லாட்டரியில் ஜாக்பாட் அடித்ததால் ரூ.2.5 கோடிக்கு அதிபதியாகி உள்ளார்.
லாட்டரியில் சில நேரங்களில் அதிர்ஷ்டம் அடிப்பது உண்டு. ஆனால் பலருக்கும் லாட்டரி ஏமாற்றத்தை தான் கொடுத்துள்ளது. உழைக்காமல் கோடீஸ்வராக விரும்பி பலர் அதிர்ஷ்டத்தை நம்பி லாட்டரி வாங்கி வீணாக போயிருக்கிறார்கள். உழைத்த பணத்தை எல்லாம் லாட்டரி சீட்டு வீணாவது தடுக்கப்பட வேண்டும் என்ற நோக்கில் தமிழ்நாட்டில் லாட்டரி சீட்டு தடை செய்யப்பட்டுள்ளது.

அதேநேரம் தமிழ்நாட்டை தவிர மற்ற மாநிலங்களில் லாட்டரி சீட்டு உள்ளது.. நம்மூரைச் சேர்ந்த பலர் கேரளாவில் லாட்டரி வாங்குவார்கள். கேரளாவை தாண்டி, பஞ்சாப், மிசோரம், நாகலாந்து, மேற்கு வங்கம் உள்பட பல்வேறு மாநிலங்களில லாட்டரி சீட்டு விற்பது தொடர்ந்து வருகிறது.
பஞ்சாபைச் சேர்ந்த விவசாயிக்கு நல்ல ஜாக்பாட் அடித்திருக்கிறது. ஹோஷியார்பூரைச் சேர்ந்தவர் ஷீத்தல் சிங் என்ற விவசாயி ஒருவர் இரண்டு பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகிறார். அவரது இரண்டு பிள்ளைகளுக்கும் திருமணமாகிவிட்டது. இவர் தன் குடும்பத்தில் ஒருவருக்கு உடல் நிலை சரியில்லாததால், மருந்து வாங்குவதற்காக, மருத்து கடைக்குச் சென்றிருக்கிறார். மருந்து வாங்கிய நிலையில், அருகில் உள்ள கடையில் லாட்டரி இருப்பதை கண்டார். அந்த கடையில் ஒரு லாட்டரி சீட்டையும் வாங்கியுள்ளார். தொடர்ந்து மருந்து வாங்கி விட்டு வீட்டுக்குத் திரும்பி உள்ளார்.
இதனிடையே ஷீத்தல் சிங்கிற்கு சுமார் நான்கு மணி நேரத்துக்குப் பிறகு, லாட்டரி கடை நடத்தும் உரிமையாளரிடமிருந்து ஒரு போன் வந்திருக்கிறது. ஷீத்தல் சிங்கிடம் 2.5 கோடி ரூபாய் வென்றதாக லாட்டரி கடை உரிமையாளர் கூறியுள்ளார். இதைக் கேட்டு இன்ப அதிர்ச்சியில் உறைந்து போனார்.
உடனே இந்த சந்தோஷமான செய்தியை குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார். குடும்பத்துடன் கலந்தாலோசித்து இந்தப் பணத்தைச் செலவு செய்யத் திட்டமிட்டுள்ளார். லாட்டரி கடையின் உரிமையாளர், கடந்த 15 ஆண்டுகளாக இந்தத் தொழில் செய்து வந்துள்ளளார். வாடிக்கையாளர் ஒருவர் கோடிக்கணக்கில் பணம் பெறுவது தன்னிடம் இது மூன்றாவது முறை என்று நெகிழ்ச்சி தெரிவித்தார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications