ரூ.10000000 கூரையினை பிச்சிட்டு கொட்டி.. ஜஸ்ட் 6 ரூபாய் லாட்டரி டிக்கெட்டில் வந்த அதிர்ஷ்டம்.. குஷி
சண்டிகர்: லாட்டரி மோகம் இந்திய மக்களிடம் குறையவேயில்லை.. என்றாவது ஒரு நாள் அதிர்ஷ்ட காற்று வீசும் என்ற நம்பிக்கையில் லாட்டரி டிக்கெட்டை தொடர்ந்து வாங்கி கொண்டிருக்கிறார்கள்.. ஆனாலும், ஒரு சிலருக்கே அப்படியான அதிர்ஷ்டம் அடிக்கிறது.. இதோ பஞ்சாப் மாநில கூலித் தொழிலாளி, ஒரே நாளில் கோடீஸ்வரரான சம்பவம்தான் இணையத்தில் தற்போது பேசுபொருளாகி வருகிறது.. யாரிந்த தொழிலாளி?
சில மாதங்களுக்கு முன்பு, பஞ்சாப் ராக்கி பம்பர் லாட்டரியில் 67 வயதான ஸ்கிராப் டீலருக்கு அதிர்ஷ்டம் அடித்தது.. அதாவது, லாட்டரியில் 2.5 கோடி ரூபாய் ஜாக்பாட் அடித்த சம்பவம் பஞ்சாப் மாநிலத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.

50 வருடம் பழக்கம்
ஜலந்தர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 67 வயதான ப்ரீதம் லால் ஜக்கி என்பவருக்குதான், இந்த பரிசு விழுந்தது.. ப்ரீதம் லால் கடந்த 30 ஆண்டுகளாக ஜலந்தரில் ஸ்கிராப் டீலர்ஷிப் செய்து வந்தாலும் பெரிதாக லாபம் எதுவுமில்லாமல் அவதிப்பட்டு வந்தார்.. ஆனால், 50 வருடங்களாகவே தொடர்ந்து லாட்டரி டிக்கெட் வாங்கி வந்திருக்கிறார் ப்ரீதம் லால்.
அப்படித்தான், கடந்த ரக்ஷா பந்தன் பண்டிகை தினத்தன்றும், 500 ரூபாய் கொடுத்து தனது மனைவி பெயரில் ராக்கி பம்பர் லாட்டரி சீட்டை வாங்கியுள்ளார் ப்ரீதம் லால்... லாட்டரி சீட்டு 452749 எண்ணிற்கு அதாவது, ப்ரீதம் லால் வாங்கிய லாட்டரிக்கு 2.5 கோடி ரூபாய் பரிசு விழுந்தது.. இதை கேட்டதுமே திக்குமுக்காடிப்போனார் ப்ரீதம் லால்..
கோடீஸ்வரர்
பல வருட காலம் வறுமையில் வாடிய நிலையில், ஒரே நாளில் ப்ரீதம் லால் கோடீஸ்வரர் ஆகிவிட்ட சம்பவம் பஞ்சாப் மாநிலம் முழுக்க பரபரத்தது... 50 வருடமாக லாட்ட டிக்கெட்டை வாங்கி வந்தாலும், முதன்முதலாக 1 ரூபாய்க்கு லாட்டரி டிக்கெட் வாங்கினாராம்.. அப்போது முதல், இன்று 500 ரூபாய் லாட்டரி டிக்கெட் வரை சளைக்காமல் வாங்கி வந்ததுடன், அதில் பலனையும் பெற்றது, மீடியாக்களின் கவனத்தை பெற்றிருந்தது.
தனக்கு இதுவரை சொந்த வீடு இல்லாததால், இனி ஒரு வீடு கட்டி மனைவியுடன் மகிழ்ச்சியாக இருக்க போவதாகவும், மிச்சமுள்ள லாட்டரி பணத்தில் 25 சதவீதத்தை சமூகப்பணிக்கு செலவழிக்க போவதாகவும் ப்ரீதம் லால் ஜக்கி கூறியிருந்ததும் அம்மாநில மக்களின் கவனம் பெற்றது.
செங்கல் சூளை தொழிலாளி
மோகா மாவட்டத்தை சேர்ந்த அந்த தொழிலாளி பெயர் ஜாஸ்மயில் சிங்.. இவர் அங்குள்ள செங்கல் சூளையில் பணியாற்றி வருகிறார். கூலித் தொழிலாளியான இவர் பெரோஷ்பூருக்கு சென்றபோது, ரூ.6க்கு லாட்டரி டிக்கெட் வாங்கியிருக்கிறார்..
மறுநாள் லாட்டரி டிக்கெட்டை விற்பனை செய்தவரிடமிருந்து, ஜாஸ்மயில் சிங்குக்கு போன் வந்துள்ளது.. அதில், ஒரூ.1 கோடியை வென்றுள்ளீர்கள் என்று சொன்னதை கேட்டு, இன்ப அதிர்ச்சியடைந்துள்ளார் ஜாஸ்மயில்..
உடனே, இசை வாத்தியங்களுடன் அவரது குடும்பத்தினருடன் ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்... கிலோ கணக்கில் ஸ்வீட்களை வாங்கி, அந்த பகுதி மக்களுக்கெல்லாம் தந்து கொண்டிருக்கிறார் ஜாஸ்மயில்.. மகிழ்ச்சியை பகிர்ந்தார்.
வெறும் 6 ரூபாய் டிக்கெட்
இது குறித்து ஜாஸ்மயில் சிங் சொல்லும்போது, இந்தப் பணத்தை வைத்து ரு.25 லட்சம் கடனை அடைப்பேன். மிச்ச தொகையை என்னுடைய குழந்தைகளின் எதிர்கால பாதுகாப்புக்காக பயன்படுத்துவேன் என்கிறார்....
பஞ்சாப் மாநிலத்தில் ரூ.6க்கு லாட்டரி வாங்கிய கூலித் தொழிலாளிக்கு ரூ.1 கோடி பரிசு விழுந்துள்ள சம்பவம் இணையத்திலும் பேசுபொருளாகி வருகிறது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications