300 பேருக்கு மேல் விருந்தினர் வந்தால் திருமண வீட்டாருக்கு அபராதம்: கர்நாடகாவில் சட்டம் வருகிறது
பெங்களூர்: ஆடம்பர திருமணங்களை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் தனி நபர் சட்ட மசோதா ஒன்று கர்நாடக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏவும், முன்னாள் சபாநாயகருமான ரமேஷ்குமார் இந்த தனி நபர் மசோதாவை இன்று சட்டசபையில் தாக்கல் செய்துள்ளார்.

கர்நாடக மாநில திருமணங்கள் (பதிவு மற்றும் இதர) சட்டம்-2015 என்ற பெயருள்ள இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இதை விவாதத்திற்கு எடுத்துக்கொள்வதாக, சபாநாயகர் காக்கோடு திம்மப்பா சபையில் தெரிவித்தார்.
300 அல்லது அதற்கும் குறைவான விருந்தினர்கள் வருகை தந்தால் மட்டுமே அது ஆடம்பரம் இல்லாத திருமணம் என்று இந்த சட்ட மசோதாவில், குறிப்பிடப்பட்டுள்ளது. திருமண மண்டபங்களுக்கு நாள் ஒன்றுக்கு அதிகபட்ச வாடகையாக ரூ.50 ஆயிரம் மட்டுமே நிர்ணயிக்க வேண்டும் என்று மண்டப உரிமையாளர்களுக்கு உத்தரவிட இந்த மசோதா வகை செய்கிறது.
இதுபோன்ற விதிமுறைகள் மீறப்பட்டால், சம்மந்தப்பட்டவர்களிடம் அபராதம் வசூலிக்கலாம். ஆடம்பரமாக திருமணம் செய்ய வேண்டும் என்ற வேட்கையில், மக்கள் தங்கள் கையிருப்பை தொலைத்துவிடுவதாக முதல்வர் சித்தராமையா கடந்த ஆண்டு ஒரு கருத்து தெரிவித்திருந்தார். அரசே ஆடம்பர திருமண தடை சட்டத்தை கொண்டுவர உள்ளதாக கூறினார். ஆனால், மக்களிடமிருந்து எதிர்ப்பு கிளம்பியதால் அது கிடப்பில்போடப்பட்டது.
இந்நிலையில், ரமேஷ்குமார் தாக்கல் செய்த தனி நபர் மசோதா மீது விவாதம் நடந்து தேவைப்படும் மாற்றங்கள் செய்து, சட்டமாக்கவும் வாய்ப்புள்ளது. அல்லது எதிர்ப்பு கிளம்பினால் மசோதாவை சட்டமாக மாற்றாமல்விடவும் வாய்ப்புள்ளது. இன்னும் சில நாட்களில் அதுகுறித்து தெரியவரும்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications