ஜெ., சசி, சுதாகரன், இளவரசிக்கான தண்டனை விவரம்: இன்னும் சிறிது நேரத்தில் அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகள் என்று அறிவித்துள்ள நிலையில், தண்டனை விவரத்தை நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா விரைவில் அறிவிக்க உள்ளார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து தீர்ப்பு விவரத்தை உணவு இடைவேளைக்கு பிறகு அறிவிப்பதாக நீதிபதி கூறினார்.

Quantum of punishment is expected to announce by speacial court soon

எனவே குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட நால்வரும் கோர்ட் வளாகத்திற்குள்ளேயே உள்ளனர். எந்த நேரத்தில் வேண்டுமானாலும் தீர்ப்பு குறித்த விவரம் வெளியே வரும் என்பதால் அதிமுகவினரும், பொதுமக்களும், மீடியாக்காரர்களும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

தீர்ப்பில் அறிவிக்கப்படும் தண்டனையை பொறுத்துதான் ஜெயலலிதாவின் அரசியல் எதிர்காலம் இருப்பதால் நாடு முழுவதுமே மிகுந்த பரபரப்புடன் தீர்ப்பை எதிர்பார்த்துள்ளது.

இதனிடையே கோர்ட் அமைந்துள்ள பரப்பன அக்ரஹாரா பகுதியில் வன்முறையில் ஈடுபட்டதாக அதிமுகவினர் 30 பேரை பெங்களூர் போலீசார் கைது செய்துள்ளனர். கோர்ட்டை சுற்றி 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+