சரத்குமார் - ராதிகா மகளுக்கு திருமண நிச்சயதார்த்தம் - கிரிக்கெட் வீரர் அபிமன்யு மிதுனை மணக்கிறார்
சென்னை: சரத்குமார்- ராதிகா நட்சத்திர தம்பதியின் மகள் ரேயானுக்கும், பெங்களூருவைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் அபிமன்யு மிதுனுக்கும், வருகிற 23ம் தேதி சென்னையில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெறுகிறது.
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் நடிகர் சரத்குமார்-ராதிகா சரத்குமாரின் மகள் ரேயான். இங்கிலாந்தில் உள்ள லீட்ஸ் பல்கலைக்கழகத்தில் விளையாட்டு நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற இவர், சென்னையில் உள்ள ராடான் டிவியின் துணைத்தலைவராக பதவி வகித்து வருகிறார். தற்போது இவருக்கு திருமணம் உறுதி செய்யப் பட்டுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த அபிமன்யூ மிதுனை ரேயான் மணக்க இருக்கிறார். அபிமன்யூ இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளராக விளையாடி வருகிறார். ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அபிமன்யூ விளையாடி வருகிறார்.
இவர்களது திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சி வருகிற 23ம் தேதி (புதன்கிழமை) காலை 10 மணிக்கு சென்னையில் நடைபெற உள்ளது. அன்றைய தினம் திருமண தேதி குறித்து முடிவு செய்ய இருக்கிறார்கள்.

இது பெற்றோர்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள திருமணம் ஆகும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications