ராகுலும் குழப்பத்தில், காங்கிரஸும் குழப்பத்தில்: என்ன கொடுமை சார் இது- பாஜக நக்கல்
டெல்லி: விடுப்பில் சென்று திரும்பியுள்ள ராகுல் காந்தியும், காங்கிரஸும் குழப்பத்தில் உள்ளதாக பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி 57 நாட்கள் விடுப்புக்கு பிறகு வியாழக்கிழமை டெல்லி திரும்பினார். இது குறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா கூறுகையில்,

பகுதி நேர அரசியல் என்ற ஒன்று இல்லை. இது முழு நேர வேலை. உங்கள் பொறுப்பில் இருந்து திடீர் என்று பின்வாங்க முடியாது. விடுப்பில் இருந்து திரும்பி வந்துள்ள ராகுல் என்ன செய்வது என தெரியாமல் குழம்புகிறார். ராகுலை கட்சியின் தலைவர் ஆக்கலாமா இல்லை ஓரங்கட்டலாமா என்பது தெரியாமல் காங்கிரஸும் குழப்பத்தில் உள்ளது.
ராகுல் விவசாயிகள் பேரணியில் கலந்து கொண்டு பேசப் போகிறாராம். எந்த விவசாயி பற்றி அவர் பேசுவார்? பாங்காக்கில் இருந்து கொண்டு விவசாயிகளின் நிலைமை குறித்து ஆய்வு செய்திருப்பாரோ?
அரசியலில் ஐட்டம் நம்பர் இல்லாமல் இருந்தது. ராகுல் விடுப்பில் சென்று வந்தது ஐட்டம் நம்பர் ஆகியுள்ளது. 2 மாதம் விடுப்பில் செல்வது பற்றி ராகுல் மக்களிடம் கேட்டாரா?
இந்திய அரசியலில் முதல் முறையாக அரசியல் கட்சியின் முக்கிய நபர் ஒருவர் பல காலம் மாயமாகி திரும்பி வந்துள்ளது பெரிய செய்தியாகியுள்ளது என்றார்.
-
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
ராஜினாமா பண்ணிட்டா.. ஆட்டம் முடிஞ்சதுன்னு அர்த்தம் கிடையாது! எம்பி பதவியை உதறிய சித்தராமையா -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
ராகுல் காந்தியை முதலமைச்சர் விஜய் சந்திக்காதது ஏன்? பிரவீன் சக்கரவர்த்தி கொடுத்த விளக்கம்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார்












Click it and Unblock the Notifications