கேரள மாநிலத்தை தேசிய பேரிடராக உடனே அறிவியுங்கள் மோடிஜி- ராகுல் காந்தி கோரிக்கை
Recommended Video

டெல்லி: கேரள மாநிலத்தை தேசிய பேரிடர் பகுதியாக அறிவிக்க வேண்டும் என்று ராகுல் காந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.
கேரளத்தில் வரலாறு காணாத மழையால் கடவுளின் தாய் வீடே தண்ணீரில் தத்தளித்து வருகிறது. எங்கு திரும்பினாலும் கழுத்தளவு தண்ணீரால் மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.

இந்த மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவுக்கு 300-க்கும் மேற்பட்டோர் பலியாகிவிட்டனர். வீடு, உடைமைகளை இழந்து மக்கள் பரிதவித்து வருகின்றனர்.
இந்த மாநில மக்களுக்கு பல்வேறு மாநில அரசுகள் நிதியுதவி அளித்து வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி இன்று வெள்ளம் பாதிப்பு பகுதிகளை ஆய்வு செய்து முதல் கட்டமாக ரூ.500 கோடி தருவதாக உறுதி அளித்தார்.
Dear PM,
— Rahul Gandhi (@RahulGandhi) August 18, 2018
Please declare #Kerala floods a National Disaster without any delay. The lives, livelihood and future of millions of our people is at stake.
இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில் கூறுகையில் லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. சிறிதும் தாமதமின்றி கேரளத்தை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று டுவிட்டரில் கேட்டுக் கொண்டார்.












Click it and Unblock the Notifications