பிரியங்கா "ஓவர்டேக்" செய்து விடுவாரோ என்று பயப்படுகிறார் ராகுல்.. பாஜக சீண்டல்!
டெல்லி: லோக்சபாவில் திடீரென ராகுல் காந்திக்குக் கோபம் வந்ததற்கு பாஜக ஒரு வித்தியாசமான காரணத்தைக் கூறியுள்ளது. தேர்தல் தோல்வியால் எங்கே தான் ஒதுக்கப்பட்டு பிரியங்கா காந்தியிடம் பொறுப்புகளும், கட்சியும் போய் விடுமோ என்று பதட்டமடைந்துள்ளார் ராகுல் காந்தி. இதனால்தான் இதுவரை இல்லாத அளவுக்கு லோக்சபாவில் கோபம் காட்டியுள்ளார் அவர் என்று பாஜக கூறியுள்ளது.
தேர்தல் தோல்வியை ராகுல் காந்தியால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இதனால் ஏற்பட்ட இயலாமைதான் அவரைக் கோபம் மிக்கவராக மாற்றியிருக்கிறது என்றும் பாஜகவினர் வர்ணிக்கின்றனர்.
மேலும் கட்சிக்குள் ஏற்பட்டு வரும் அழுத்தங்களையும், நெருக்கடிகளையும், சவால்களையும் அவரால் சமாளிக்க முடியவில்லை. இதன் வெளிப்பாடுதான் இந்த விரக்தி கலந்த கோபம் என்றும் பாஜக கூறுகிறது.

மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி இதுகுறித்துக் கூறுகையில், காரணம் மிகத் தெளிவானது. காங்கிரஸ் தலைவர்கள் சிலர் இன்று தேர்தல் தோல்வி காரணமாக கடும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளனர். அரண்மனைப் புரட்சி நடந்து கொண்டிருக்கிறது. கட்சிக்குள்ளேயே புரட்சி வெடித்துள்ளது என்றார் ஜேட்லி.
அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறுகையில், சுரத்தை இழந்து விட்டார் ராகுல் காந்தி. தோல்வியால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து அவரால் மீண்டு வர முடியவில்லை. நிஜத்தை அவர்களால் ஏற்க முடியவில்லை. இதுதான் காரணம் என்றார்.
அதேசமயம், பிரியங்கா காந்தி பக்கம் தற்போது காங்கிரஸாரில் பலர் சாயத் தொடங்கியுள்ளனர். ராகுல் காந்தியை நீக்கி விட்டு அவருக்குப் பதில் பிரியங்காவிடம் கட்சிப் பொறுப்பை தர வேண்டும் என்ற பேச்சுக்கள் கிளம்பியுள்ளன. இதுவும் ராகுலை டென்ஷனாக்கியிருப்பதாக பாஜகவினர் மட்டுமல்லாமல் வேறு பலரும் கூட கூற ஆரம்பித்துள்ளனர்.
-
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications