மீண்டும் ஒரு வெளிநாட்டு பயணத்திற்கு ரெடியான ராகுல் காந்தி! இம்முறை மர்மம் இல்லை
டெல்லி: காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் ராகுல் காந்தி மீண்டும் ஒரு வெளிநாட்டு பயணத்திற்கு ரெடியாகிவிட்டார். ஆனால் முன்பு போல இல்லாமல், ஐரோப்பா செல்வதாக இம்முறை போகும் ஊரை குறிப்பிட்டுவிட்டார்.
சோனியாவை தொடர்ந்து, காங்கிரசின் அடுத்த தலைவராக உருவெடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட அக்கட்சி துணை தலைவர் ராகுல் காந்தி, தொடர்ந்து சொதப்பலான வகையில் செயல்பட்டதால், இன்னும் தலைவர் பதவியை தராமல் சோனியா இழுத்தடித்து வருகிறார்.

இந்நிலையில், லோக்சபா தேர்தல் முடிந்த நிலையில் திடீரென காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி வெளிநாடு ஒன்றுக்குப் போனார். சுமார் 50 நாட்கள் வெளிநாட்டில் இருந்து விட்டு அவர் நாடு திரும்பினார். அவர் எந்த நாட்டுக்குப் போனார்? எதற்காக இந்த திடீர் தலைமறைவு ஓய்வு பயணம்? என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாக வில்லை.
இந்த பரபரப்பு இன்னும் நீடிக்கும் நிலையில், தற்போது மீண்டும் வெளிநாடு செல்கிறார் ராகுல் காந்தி. ராகுல்காந்தி அலுவலக டிவிட்டர் கணக்கில், புத்தாண்டு வாழ்த்துக்களை பகிர்ந்துள்ள அவர், நான் சில நாட்கள் ஐரோப்பாவில் சுற்றுப்பயணம் செய்ய உள்ளேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
I will be traveling to Europe for a few days. A very Happy New Year to everyone (1/2)
— Office of RG (@OfficeOfRG) December 28, 2015 ஐரோப்பாவில் எந்தெந்த நாடுகளுக்கு பயணிக்க உள்ளார், ஏன் அங்கு செல்ல உள்ளார் என்பது போன்ற தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.












Click it and Unblock the Notifications