அப்பாடா.. ஒரு வழியா எங்க சாதனையை ஏற்றுக்கொண்டார்.. ராகுலை கேலி செய்யும் பாஜக.. ஏன் தெரியுமா?
ராய்ப்பூர்: ராகுல் காந்தியும் அவரது கட்சியின் தலைவர்களும் இந்தியா அழிக்கப்பட்டு விட்டதாக எதிர்மறையான அரசியலை செய்து கொண்டு இருக்கிறார்கள். அதேநேரத்தில், காஷ்மீரில் மோடி தலைமையிலான அரசின் சாதனையை ஏற்றுக்கொண்டதற்காக அவருக்கு (ராகுல் காந்தி) நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்று பாஜக செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா தெரிவித்துள்ளார்.
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் 3 நாள் மாநாடு, சத்தீஷ்கார் மாநிலம், நவராய்ப்பூரில் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது.
இந்த மாநாட்டின் முதல் நாளில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் கலந்து கொள்ளவில்லை. மாநாட்டின் இரண்டாவது நாளில் சோனியா காந்தி பங்கேற்று பேசினார்.

தேசிய கொடி ஏற்றி இருந்ததை
கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமை ராகுல் காந்தி பேசினார். ராகுல் காந்தி பல்வேறு விஷயங்கள் குறித்து இந்த மாநாட்டில் பேசினார். தனது ஜோடோ யாத்திரை குறித்தும் பேசியிருந்தார். கன்னியாகுமரியில் தொடங்கிய யாத்திரை காஷ்மீரில் நிறைவு அடைந்தது பற்றி ராகுல் காந்தி குறிப்பிட்டார். குறிப்பாக தான் காஷ்மீரில் பாதயாத்திரை மேற்கொண்டபோது, பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள் உள்பட பல இடங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் தேசிய கொடி ஏற்றி இருந்ததை பார்த்தாக பேசியிருந்தார்.

எதிர்மறையான அரசியல்
இந்த நிலையில், ராகுல் காந்தியின் பேச்சை பாஜக கேலி செய்துள்ளது. பாஜக செய்தி தொடர்பாளர்
சம்பித் பத்ரா செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், உலகமே இந்தியாவை இன்று பிரகாசமான ஒரு நாடாக பார்க்கிறது. ஆனால், ராகுல் காந்தியும் அவரது கட்சியின் தலைவர்களும் இந்தியா அழிக்கப்பட்டு விட்டதாக எதிர்மறையான அரசியலை செய்து கொண்டு இருக்கிறார்கள். அதேநேரத்தில், காஷ்மீரில் மோடி தலைமையிலான அரசின் சாதனையை ஏற்றுக்கொண்டதற்காக அவருக்கு (ராகுல் காந்தி) நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இதற்கு முன்பாக தேசியக் கொடி ஏற்றப்படாத காஷ்மீரில் தற்போது ஆயிரக்கணக்கில் தேசியக் கொடிகளை காங்கிரஸ் கட்சியால் பார்க்க முடிகிறது என்றால் அதற்கான காரணம் என்ன என்பது பற்றி ராகுல் காந்தி சிந்தித்து பார்க்க வேண்டும்.

ராகுல் காந்தி ஒப்புக்க் கொண்டு இருக்கிறார்
காஷ்மீரின் லால் சவுக் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் தேசியக் கொடியை ஏற்றுவதற்கு மோடி அரசின் நல்ல நிர்வாகமே காரணம் ஆகும். தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட இடங்களிலும் தேசியக் கொடி ஏற்றப்பட்டு இருப்பதை ராகுல் காந்தி ஒப்புக்க் கொண்டு இருக்கிறார். அதேபோல், ராகுல் காந்தி தனக்கு சொந்தமாக வீடு கிடையாது என்றும் தாங்கள் வசித்து வந்த வீடு அரசு வீடு என்பதை உணரவில்லை என கூறியது பற்றியும் விமர்சித்துள்ள பாஜக செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா விமர்சித்துள்ளார்.

வார்த்தைகளாக வெளிவந்துவிட்டது
ராகுல் காந்தி மாநாட்டில் பேசும் போது, , ''சத்யாகிரகம் என்பதற்கு அதிகாரத்துக்கு செல்லும் பாதையில் இருந்து விலகக்கூடாது என்று பொருள்'' என தவறுதலாக கூறிவிட்டார். இருப்பினும் உடனடியாக இதை உணரந்த ராகுல் காந்தி, ''மன்னிக்கவும். பாஜக அப்படி நினைக்கிறது. சத்யாகிரகம் என்பதற்கு உண்மை பாதையில் இருந்து விலகக்கூடாது என்று அர்த்தம்'' எனத் தெரிவித்தார். இது குறித்து ராகுல் காந்தியை விமர்சித்துள்ள பாஜக, ராகுல் காந்தியின் மனதில் இருப்பது வார்த்தைகளாக வெளிவந்துவிட்டது என்று சாடியுள்ளது.
-
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
அண்ணாமலை தொடங்கும் புதிய கட்சி.. இணையும் பிரபல பிஸ்னஸ் மேன், திமுக மாஜி அமைச்சர்? அவங்களா? -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்?












Click it and Unblock the Notifications