மீண்டும் மீண்டும் ராகுல் காந்திக்கு சிக்கல்.. ஜாமீன் இல்லாத பிடிவாரண்டு நேரில் ஆஜராக உத்தரவு.. பரபர
ராஞ்சி: ராகுல்காந்தி இன்று திங்கட்கிழமை நேரில் ஆஜராக வேண்டும் என்று ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டு பிறப்பித்து கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. ஜார்க்கண்ட் சாய்பாசா நீதிமன்றம், காங்கிரஸ் எம்பி ராகுலுக்கு இந்த அதிரடியாக உத்தரவை பிறப்பித்துள்ளது. இது காங்கிரஸ் கட்சிக்குள் கடும் அதிர்வலையை உண்டுபண்ணி வருகிறது.
கடந்த 2018ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, அப்போதைய பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவை குறித்து கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.. ராகுல் தெரிவித்த கருத்துக்களுக்கு பாஜகவில் இருந்து பயங்கரமான எதிர்ப்பு கிளம்பியது.

பாஜக தேசிய தலைவர்
அதாவது 2003 குஜராத் கலவரத்தின் பின்னணியில், "கொலை வழக்கில் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் ஒருவர் கூட பாஜகவின் தலைவராக முடியும்" என்று ராகுல் கருத்து தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. அதாவது, கொலை குற்றச்சாட்டுக்கு ஆளானவர் கூட பாஜகவின் தேசிய தலைவராகலாம், ஆனால் காங்கிரஸ் கட்சியில் அதற்கெல்லாம் சாத்தியமில்லை என்று ராகுல் பேசியதாக தெரிகிறது. இதைக்கேட்டு பாஜகவினர் கொந்தளித்தனர்.
கொதித்த பாஜக
பாஜக மூத்த தலைவர் பிரதாப் கடியார் என்பவர் ஜார்கண்ட் மாநிலம் சைபாசா நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.. ராகுல்காந்தியின் இந்தக் கருத்து அவதூறாகவும், பாஜக தொண்டர்களை அவமானப்படுத்துவதாகவும் உள்ளது என்று தன்னுடைய மனுவில் குறிப்பிட்டிருந்தார்.. அங்குள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கான சிறப்பு கோர்ட்டில் இது தொடர்பான வழக்கும் நடந்து வருகிறது.
ஏற்கனவே பலமுறை சம்மன் அனுப்பியும் ராகுல் காந்தி ஆஜராகவில்லை. இதில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க கோரி, ராகுல்காந்தி தரப்பில் ஜார்கண்ட் ஐகோர்ட்டில் முறையிட்டனர். அவர்கள் பிடிவாரண்டை பல மாதங்கள் நிறுத்தியும் வைத்திருந்தனர்.. கடந்த வருடம் மார்ச் மாதமும், ராகுல்காந்தியின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது..
பிடிவாரண்ட் - நேரில் ஆஜர்
மறுபடியும் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க ராகுல்காந்தியின் வழக்கறிஞர் முறையிட்டும்கூட கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இந்நிலையில், ராகுல்காந்தி இன்று அதாவது திங்கட்கிழமை நேரில் ஆஜராக வேண்டும் என்று ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டுபிறப்பித்து கோர்ட்டு உத்தரவிட்டிருக்கிறது.. எனவே, இன்று 26 ம் தேதி விசாரணைக்கு ராகுல் காந்தி ஆஜராவாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது..
இதுபோன்ற இன்னொரு அவதூறு வழக்கு சுல்தான்பூர் கோர்ட்டிலும் நடந்து வரும் நிலையில், கடந்த ஜூலை மாதம் அந்த கோர்ட்டில் ராகுல்காந்தி நேரில் ஆஜராகியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications