இன்னொரு பரம்பரைத் தலைவர்... நேருவின் "கொள்ளுப் பேரனுக்கு" பச்சைக் கொடி காட்டிய சோனியா
டெல்லி: காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக நேருவின் கொள்ளு பேரன்களில் ஒருவரான ராகுல் காந்தி நியமனம் செய்யப்படுவது உறுதியாகி உள்ளது. உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள சோனியா காந்தி இதற்கான க்ரீன் சிக்னலை கொடுத்திருக்கிறார் என்கின்றன டெல்லி வட்டாரங்கள்.
டெல்லியில் இன்று நடைபெற்ற காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள 7 மாநில தேர்தல்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. அதைவிட காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்க வேண்டும் என்பதே மிக முக்கியமான விவாதமாகி இருந்துள்ளது.
ராகுல் காந்தி தலைவராக பொறுப்பேற்க வேண்டும் என முதலில் மூத்த தலைவர் ஏ.கே. ஆண்டனி வலியுறுத்தி பேசினார். அவரது கருத்து முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் உள்ளிட்ட பெரும்பாலான காரிய கமிட்டி தலைவர்கள் ஆதரவு தெரிவித்திருந்தனர்.

சோனியாவா? ராகுலா?
இருந்தபோதும் சிலர் மட்டும் சோனியா காந்தியே தலைவராக நீடிக்க வேண்டும் எனவும் கருத்துகளை முன்வைத்திருந்தனர். அதே நேரத்தில் சோனியாவின் நம்பிக்கையாளர்களான மன்மோகன்சிங், ஆண்டனி உள்ளிட்டோர் ராகுல் தலைமை பதவியை ஏற்க வேண்டும் என பேசியிருப்பது சோனியாவின் விருப்பத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்கள் என்றே தெரிகிறது.

க்ரீன் சிக்னல்
சோனியாவிடம் இருந்து க்ரீன் சிக்னல் வந்ததாலேயே காரிய கமிட்டி கூட்டத்தில் தலைவர் பதவியை ராகுல் காந்தி ஏற்க வேண்டும் என்ற அழுத்தம் கொடுக்கப்பட்டிருப்பதாகவே அக்கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன. நாட்டின் விடுதலைக்கு போராடிய காங்கிரஸ் கட்சியில் பல்வேறு தலைவர்கள் தலைவர் பதவியில் அமர்ந்திருக்கின்றனர்.

நேரு காலம்...
நாடு விடுதலை பெற்றபோது காங்கிரஸ் கட்சியை கலைத்துவிடலாம் என்று காந்தியடிகளே கூறியிருந்தார். ஆனால் நாட்டின் விடுதலைக்குப் பின்னர் நேரு குடும்பத்தின் வாரிசுகள்தான் பெரும்பாலும் காங்கிரஸ் தலைவர் நாற்காலியில் அமர்ந்து வருகின்றனர். 1928-ல் ஜஹவர்லால் நேருவின் தந்தை மோதிலால் நேரு காங்கிரஸ் தலைவராக இருந்தார். அதற்கு அடுத்த 2 ஆண்டுகள் ஜவஹர்லால் நேரு தலைவராக பதவி வகித்தார். நாடு விடுதலை அடைந்த 1947-ல் கிருபாளினி தலைவராக இருந்தார். 1951 முதல் 1954 வரை ஜவஹர்லால் நேரு காங்கிரஸ் தலைவராக இருந்தார். 1959-ல் நேருவின் மகள் இந்திரா காங்கிரஸ் தலைவராக்கப்பட்டார். ஆனாலும் அவர் தொடர்ந்து தலைவராக செயல்படவில்லை. நீலம் சஞ்சீவ ரெட்டி, தமிழகத்தின் காமராஜர், நிஜலிங்கப்பா ஜெகஜீவன் ராம், சங்கர் தயாள் சர்மா என பலரும் அடுத்தடுத்து காங். தலைவர் பதவியில் இருந்தனர்.

இந்திரா, ராஜீவ்...
1978-ல் தொடங்கி 1984-ம் ஆண்டு மறையும் வரை இந்திராவே காங். தலைவராக இருந்தார். அதேபோல் அவரது மகன் ராஜீவ் காந்தியும் 1984-ம் ஆண்டு முதல் அவர் மறைந்த 1991-ம் ஆண்டு வரை தொடர்ந்து காங்கிரஸ் தலைவராக இருந்தார். ராஜிவ் மறைவுக்குப் பின்னர் சோனியாவை தலைவராக்க முயற்சிகள் நடைபெற்றன. ஆனால் அவர் மறுத்துவிட்டார்.

18 ஆண்டுகாலம் சோனியா..
இதனால் பிவி நரசிம்மராவ், காங்கிரஸ் தலைவரானார். அவருக்கு பின்னர் சீதாராம் கேசரி காங்கிரஸ் தலைவரானார். பின்னர் காங்கிரஸ் தலைவராக சோனியா காந்தி 1998-ம் ஆண்டு பதவி ஏற்றார். தற்போது வரை காங்கிரஸ் தலைவராக சோனியாவே சுமார் 18 ஆண்டுகாலம் இருந்து வருகிறார். நேரு குடும்பத்தில் அதிக ஆண்டுகள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை வகித்தது சோனியா காந்திதான்.

ராகுல்
தற்போது மகன் ராகுல் காந்தியை அடுத்த காங்கிரஸ் தலைவராக்க இருக்கிறார் சோனியா. அதற்கான அதிகாரப்பூர்வ வேலைகளை இன்றைய காங்கிரஸ் காரிய கமிட்டி மூலம் தொடங்கி வைத்திருக்கிறார் சோனியா என்கின்றனர் டெல்லி காங். தலைவர்கள்.
-
அடித்து ஆடிய எடப்பாடி.. திமுக கேம்பில் எதிர்பார்க்காத குளறுபடி.. ஸ்டாலின் மனதில் என்ன இருக்கிறது?.. -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
பாஜக கூட ஓகே.. தவெகதான் பிரச்சனை.. செல்வப்பெருந்தகை சரமாரி குற்றச்சாட்டு -
வன்னியர் மட்டும் வாழக் கூடாதா? காங்கிரஸ் கட்சிக்குள் வெடித்த மோதல்! சீனியர் தலை போட்ட பரபர மீட்டிங்! -
கேரளா தலையெழுத்தை தீர்மானிக்கும் "அந்த" சில ஆயிரம் வாக்குகள்.. கரையேறுமா காங்கிரஸ்? -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்?












Click it and Unblock the Notifications