ஒட்டுமொத்த பழங்குடியினரின் வலி இது! ஹேமந்த் சோரனின் வார்த்தைகளை.. மேற்கோள் காட்டிய ராகுல் காந்தி
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின்போது முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் பேசிய வார்த்தைகளை ராகுல் காந்தி, மேற்கோள்காட்டி நாடு முழுவதும் பழங்குடி மக்களின் நிலை இதுதான் என்று கூறியுள்ளார்.
எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் மத்திய விசாரணை அமைப்புகளின் தலையீடுகள் அதிக அளவில் இருப்பதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன. இதை மெய்ப்பிக்கும் விதமாக அமலாக்கத்துறையின் நடவடிக்கைகளும் இருக்கிறது என அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர். அதாவது,

பாஜகவுடன் நெருங்கிய தொடர்பை வைத்துள்ள ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மீது சொத்துக்குவிப்பு வழக்கு இருக்கிறது, அதேபோல மகாராஷ்டிராவில் ஆட்சியிலிருக்கும் சிவசேனா-பாஜக கூட்டணியின் துணை முதல்வராக இருக்கும் அஜித் பவார் மீது பிரதமர் நரேந்திர மோடியே நேடியாக ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தியிருக்கிறார். இவர்களையெல்லாம் விசாரணைக்கு அழைக்காத, சம்மன் அனுப்பாத அமலாக்கத்துறை, அரவிந்த் கெஜ்ரிவால், ஹேமந்த் சோரன் என இந்தியா கூட்டணியில் இருக்கும் தலைவர்களை மட்டும் குறிவைப்பதாக கூறியுள்ளனர்.
இந்நிலையில் இன்று சம்பாய் சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தியது. இம்மாநில சட்டசபையில் மொத்தம் 81 சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றனர். இதில் பெரும்பான்மை கிடைக்க வேண்டும் எனில் 41 உறுப்பினர்களின் ஆதரவு ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்சா+காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு கிடைக்க வேண்டும். இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் அமலாக்கத்துறையால் கடந்த 30ம் தேதி கைது செய்யப்பட்ட ஹேமந்த் சோரனும் பங்கேற்கலாம் என நீதிமன்றம் அனுமதித்திருந்தது.
हेमंत सोरेन जी ने आज विधानसभा में बहुत मार्मिक बात कही "हम जंगल से बाहर आए, इनके बराबर में बैठ गए, तो इनके कपड़े मैले हो गए"।
— Rahul Gandhi (@RahulGandhi) February 5, 2024
यह सिर्फ एक बयान नहीं, पूरे आदिवासी समाज की संयुक्त पीड़ा है। प्रदेश में एक आदिवासी मुख्यमंत्री है, यही बात भाजपा को बर्दाश्त नहीं हो रही है।
आज झारखंड…
இந்நிலையில் இன்று காலை ஜார்க்கண்ட்ட சட்டசபையில் அவர் ஆற்றிய உரை பெரும் கவனம் பெற்றிருக்கிறது. அதாவது, “என் மீதான ஊழல் குற்றச்சாட்டை நிரூபிக்குமாறு பாஜகவுக்கு சவால் விடுகிறேன், நிரூபிக்கப்பட்டால் அரசியலில் இருந்து விலகுகிறேன். ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட ஜார்க்கண்ட் அரசை சீர்குலைக்க பாஜக முயன்றது. மத்திய அரசின் இந்த சதி திட்டத்தின் பின்புலத்தில் ஆளுநர் மாளிகையும் இருக்கிறது. என்னை கைது செய்யப்பட்ட நாள் தேசத்தின் கருப்பு நாள்.
“நான் விமானத்தில் செல்வதும், 5 நட்சத்திர ஹோட்டல்களில் தங்குவதும் சிலரால் செரித்துக்கொள்ள முடியவில்லை. என்னைப் போன்ற பழங்குடியினர் காட்டை விட்டு வெளியே வந்துவிட்டதாக அவர்கள் வருத்தப்படுகிறார்கள். காட்டை விட்டு நாங்கள் வெளியே வந்து, அருகில் அமர்ந்ததும் அவர்களின் உடைகள் அழுக்காகத் தொடங்கியதாக உணர்கின்றனர். நாங்கள் காட்டுக்கு உள்ளேயே இருக்க வேண்டும் என பாஜக நினைக்கிறது” என்று கூறியிருந்தார்.

இதில், “என்னைப் போன்ற பழங்குடியினர் காட்டை விட்டு வெளியே வந்துவிட்டதாக அவர்கள் வருத்தப்படுகிறார்கள். காட்டை விட்டு நாங்கள் வெளியே வந்து, அருகில் அமர்ந்ததும் அவர்களின் உடைகள் அழுக்காகத் தொடங்கியதாக உணர்கின்றனர்” என்பதை மேற்கோள் காட்டிய ராகுல் காந்தி,
“ஹேமந்த் சோரன் இன்று சட்டசபையில் மிகவும் மனதைக் கவரும் விஷயத்தைச் சொன்னார். இது வெறும் வாக்கியமல்ல, ஒட்டுமொத்த பழங்குடி சமூகத்தின் வலி இது. ஜார்க்கண்ட்டில் பழங்குடி சமூகத்தை சேர்ந்தவர் முதல்வராக இருப்பதை பாஜகவால் பொறுத்துக்கொள்ள இயலவில்லை. மக்கள் சக்தியை மிரட்டி அடக்க முடியாது என்ற செய்தியை இன்று ஜார்கண்ட் நாடு முழுவதற்கும் கொடுத்துள்ளது. இது ஏழைகள் மற்றும் பழங்குடியினரின் ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி, உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்” என்று கூறியுள்ளார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications