For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விதிமுறை மீறவில்லையே... தேர்தல் ஆணையத்துக்கு ராகுல் பதில்

By Mathi
Google Oneindia Tamil News

Rahul Gandhi responds to EC notice, denies wrongdoing
டெல்லி: பிரசாரத்தின் போது விதிமுறைகளை மீறி தாம் பேசவில்லை என்று தேர்தல் ஆணையத்துக்கு காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி பதிலளித்துள்ளார்.

மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநில தேர்தல் பிரசாரங்களின் போது உத்தரப்பிரதேசத்தின் முசாஃபர் நகர் கலவரம் அரசியல்வாதிகளால் தூண்டிவிடப்பட்டது. இந்த கலவரத்தால் முசாஃபர் நகர் இளைஞர்கள் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐஉடன் தொடர்பு கொண்டிருக்கின்றனர் என்று ராகுல் பேசியிருந்தார்.

இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் பாஜக மனு ஒன்றையும் கொடுத்தது. இதைத் தொடர்ந்து விளக்கம் அளிக்குமாறு தேர்தல் ஆணையம் ராகுலுக்கு நோட்டீஸ் அனுப்பியது. இதற்கு ராகுல் கால அவகாசம் கேட்டார். அதை தேர்தல் ஆணையம் ஏற்றது.

இந்நிலையில் ராகுல் இன்று தனது விளக்கத்தை தேர்தல் ஆணையத்துக்கு அளித்தார். அதில் தேர்தல் பிரசாரத்தில், விதிமுறைகளை மீறி தாம் பேசவில்லை என குறிப்பிட்டுள்ளார். இந்த விளக்கம் குறித்து மூன்று தேர்தல் ஆணையர்களும் ஆய்வு செய்ய உள்ளனர்.

English summary
Congress vice president Rahul Gandhi on Friday denied violating the model code of conduct while replying to Election Commission's notice to allegations that his speeches in Madhya Pradesh and Rajasthan were communal in nature.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X