Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மாஸா.. கெத்தா! தந்தை ராஜீவ் சொன்ன ஒற்றை வார்த்தை! ஆளே மாறிப்போன ராகுல்.. லடாக்கில் பைக் ரைட்! செம

Subscribe to Oneindia Tamil

ஜம்மு காஷ்மீர்: ராகுல் காந்தி 2 நாள் பயணமாக லே மற்றும் லடாக் சென்ற நிலையில் தனது தந்தை ராஜீவ் கூறியதை நினைவுப்படுத்தி பாங்காங் ஏரிக்கு விலை உயர்ந்த பைக்கில் ஸ்டைலாக ‛ரைட்' சென்ற போட்டோக்கள் இணையதளங்களில் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ராகுல் காந்தி எப்போதும் கதர் ஆடைகளை அணிவதையே வழக்கமாக கொண்டுள்ளார். தாத்தா, பாட்டி ஆகியோர் பிரதமராக இருந்த நிலையில் தாய் காங்கிரஸ் கட்சியின் நீண்டகால தலைவராக பொறுப்பு வகித்து வந்தாலும் கூட ராகுல் காந்தி எப்போதும் எளிமையான உடைகளை அணிவதையே வாடிக்கையாக கொண்டுள்ளார்.

 Rahul Gandhi rides bike to Pangong Lake in ladakh

கடந்த ஆண்டு கன்னியாகுமரி முதல் ஜம்மு காஷ்மீர் வரை ராகுல் காந்தி ‛பாரத் ஜோடோ யாத்திரை' என்ற பெயரில் இந்திய ஒற்றுமை பயணம் என பாதயாத்திரை செய்தார். அப்போது அவர் தனது உடையை வேறு விதமாக மாற்றி கொண்டார். அதாவது வெள்ளை நிற டீசர்ட், கருப்பு நிற பேண்ட் அணிந்து பாதயாத்திரையை முடித்தார்.

இதற்கு முன்பு முகத்தில் தாடி வளர்க்காத ராகுல் காந்தி, பாதயாத்திரையின்போது தாடி வளர்க்கவும் செய்தார். அதன்பிறகு தொடர்ச்சியாக ராகுல் காந்தி வெள்ளை டீசர்ட், கருப்பு பேண்ட் அணிந்து முகத்தில் தாடியுடனே வலம் வருகிறார். சமீபத்தில் நாடாளுமன்றத்தில் நடந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின்போது மட்டும் அவர் சாதாரண உடை அணிந்து வந்தார். மற்றபடி தொடர்ந்து அவர் வெள்ளை டீசர்ட் அணிவதை தான் வாடிக்கையாக வைத்துள்ளார்.

இந்நிலையில் தான் தற்போது ராகுல் காந்தியின் சில போட்டோக்கள் இணையதளங்களில் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. பைக் ரேஸ் அல்லது பைக்கில் லாங்க் டிராவல் செய்வோர் அணிந்து கொள்ளும் பாதுகாப்பு கவசங்களுடன் ராகுல் காந்தி நீலநிற டீசர்ட் மற்றும் அதற்கு மேட்ச்சான பேண்ட் அணிந்து மாஸான லுக்கில் உள்ளார்.

ராகுல் காந்தி 3 நாள் பயணமாக லே, லடாக் பகுதிக்கு சென்ற நிலையில் அவர் கிழக்கு லடாக்கில் உள்ள பாங்காங் ஏரியில் பைக் ஓட்டி இன்று ரைட் சென்றார். அவருடன் மேலும் சிலரும் பைக்கில் பின்தொடர்ந்தனர். இந்த போட்டோக்கள் தான் தற்போது இணையதளங்களில் வெளியாகி உள்ளது. இந்த போட்டோக்களை ராகுல் காந்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். அந்த பதிவில், ராகுல் காந்தி ‛‛உலகின் மிக அழகான இடம் என்று பாங்காங் ஏரியை எனது தந்தை எனக்கு கூறிய நிலையில் அங்கு நாங்கள் சென்றோம்'' என தெரிவித்துள்ளார்.

அதேபோல் ராகுல் காந்தியின் இந்த போட்டோக்களை காங்கிரஸ் கட்சியும் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இதனை பார்த்த பலரும் ராகுல் காந்திக்கு லைக்ஸ்களை அளித்து வருகின்றனர். பலரும் ராகுல் காந்தி ஆளே மாறிட்டாரே எனவும் கமெண்ட்ஸ்களில் கூறி வருகின்றனர். ராகுல் காந்தி பாங்காங் ஏரியில் நடக்கும் தனது தந்தை ராஜிவ் காந்தியின் நினைவு கூட்டத்தில் பங்கேற்கிறார். முன்னதாக நேற்று லடாக்கில் நடந்த கால்பந்து போட்டியை ராகுல் காந்தி சாமானிய மக்களுடன் அமர்ந்து பார்த்து ரசித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+