மாஜி முதல்வர் எங்கே? பிரசாரத்துக்கு நடுவே மிசோரமில் ஸ்கூட்டரில் தேடிச்சென்ற ராகுல்.. என்ன நடந்தது?
மிசோரம்: மிசோரமில் அடுத்த மாதம் 7 ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் பிரசாரத்துக்காக சென்ற ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் முன்னாள் முதல்வரை ஸ்கூட்டரில் தேடிச்சென்றது தொடர்பான வீடியோ வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இந்தியாவில் நவம்பர் மாதத்தில் 5 சட்டசபை தேர்தல்கள் நடைபெற உள்ளது. மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா, சத்தீஸ்கர், மிசோரம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கும் அடுத்த மாதம் தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த தேர்தலுக்கான தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி நவம்பர் 7 ம் தேதி மிசோரமில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
மிசோரமில் மொத்தம் 40 தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் பதிவாகும் ஓட்டுகள் டிசம்பர் 3ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. தற்போது மிசோரமில் மிசோ தேசிய முன்னணி கட்சியின் ஆட்சி நடக்கிறது. சோரம்தாங்கா என்பவர் முதல்வராக உள்ளார்.
சட்டசபை தேர்தல் அறுிவிக்கப்பட்டுள்ளதால் மிசோராமில் இழந்த ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் தீவிரம் காட்டி வருகிறது. முதற்கட்டமாக 39 தொகுதிக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். மேலும் மிசோரமில் முகாமிட்டு ராகுல் காந்தி தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ளார். நேற்று ராகுல் காந்தி சன்னமாரி பகுதியில் இருந்து ராஜ்பவன் நோக்கி பாதயாத்திரை சென்று உரையாற்றினர்.
இதையடுத்து இன்று ராகுல் காந்தி 2வது நாளாக கட்சி தலைவர்களை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். இந்த வேளையில் ராகுல் காந்தி மிசோரம் முன்னாள் முதல்வர் லால் தன்ஹாவ்லா தேடி ஸ்கூட்டரில் சென்றார். அதாவது ராகுல் காந்தி தான் தங்கியிருந்த இடத்தில் இருந்து லால் தன்ஹாவ்லா வீட்டுக்கு காரில் செல்லாமல் அந்த வழியாக வந்தவரின் ஸ்கூட்டரில் லிப்ட் கேட்டு ஏறி அமர்ந்தார்.
அதன்பிறகு ஹெல்மெட் அணிந்து அவர் பின்இருக்கையில் அமர்ந்து லால் தன்ஹாவ்லா வீட்டுக்கு சென்றார். இந்த வேளையில் ராகுல் காந்தி ரோட்டில் செல்வதை பார்த்த ஏராளமான மக்கள் கையசைத்து உற்சாகத்தை வெளிப்படுத்தினர். மேலும் ராகுல் காந்தியின் டூவீலர் குறித்த போட்டோ மற்றும் வீடியோக்கள் இணையதளத்தில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications