மெர்சலுக்கு மீண்டும் சப்போர்ட்... தமிழில் ட்வீட் செய்த ராகுல் காந்தி!
டெல்லி: மெர்சல் படத்துக்கு ஆதரவாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி மீண்டும் ட்வீட் செய்துள்ளார். இந்த முறை தமிழிலேயே ட்விட்டை வெளியிட்டு ஆச்சர்யப்படுத்தியுள்ளார்.
விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான மெர்சல் திரைப்படத்தில் மத்திய அரசின் பணமதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டி.யால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தான வசனங்கள், காட்சிகள் இடம் பெற்றிருந்தன.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள தமிழக பா.ஜ.க மேற்கண்ட காட்சிகளை படத்திலிருந்து நீக்க வேண்டும் என மிரட்ட ஆரம்பித்தது.
இதனையடுத்து, மெர்சல் திரைப்படத்திற்கு காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, ப.சிதம்பரம் உள்ளிடோர் ஆதரவாக கருத்து தெரிவித்தனர். இதனால், மெர்சல் விவகாரம் தேசிய அளவில் ட்ரெண்டிங் ஆகிவிட்டது.
இதற்கிடையே, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியும் மெர்சல் படத்திற்கு ஆதரவாக ட்விட்டரில் நேற்று காலையில் ஆங்கிலத்தில் கருத்து தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், மீண்டும் ராகுல் காந்தி மெர்சல் படத்துக்கு ஆதரவாக தனது ட்விட்டரில் தமிழில் பதிவிட்டுள்ளார்.
அதில், "திரு.மோடி அவர்களே, சினிமா என்பது தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தின் ஆழ்ந்த வெளிப்பாடு. மெர்சல் பட விவகாரத்தில் தலையிட்டு தமிழின் தன்மானத்தை மதிப்பு இறக்கச் செய்யாதீர்கள்," என்று கூறியுள்ளார். அதாவது தனது முந்தைய ஆங்கில ட்விட்டை முழுமையாக தமிழாக்கம் செய்து வெளியிட்டுள்ளார்.
இது விஜய் ரசிகர்களை மட்டுமல்ல, தமிழ் ஆர்வலர்களையும் மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
-
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications