"இது தான்" வெட்கக் கேடானது.... ரபேல் விமான கொள்முதல் குறித்து நிர்மலா சீதாராமனுக்கு ராகுல் பதிலடி
ரபேல் விமான ஒப்பந்தம் குறித்து அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி பதிலடி கொடுத்துள்ளார்.
டெல்லி: ரபேல் விமான ஒப்பந்தத்தை குறை கூறுவது வெட்கக் கேடானது என்று அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய கருத்துக்கு காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி பதிலடி கொடுத்துள்ளார்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பிரதமர் நரேந்திர மோடி பாரீஸ் நகரத்துக்கு சென்றபோது ரூ.58,000 கோடி மதிப்பிலான 36 ரபேல் ரக போர் விமானங்களை கொள்முதல் செய்வதற்காக அந்நாட்டுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டது.

ரபேல் போர் விமான ஒப்பந்தமானது, பிரபல தொழிலதிபரின் நலனுக்காக பொதுத்துறை நிறுவனமான எச்ஏஎல் புறக்கணிக்கப்பட்டு இருப்பதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது.
இது குறித்து பதிலளித்த பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், ரபேல் ஒப்பந்தம் வெளிப்படையாக நடந்திருக்கிறது. இது தொடர்பாக காங்கிரஸ் தனது 10 ஆண்டு கால ஆட்சியில் எந்த ஒப்பந்தத்தையும் போடாமல் இருந்து விட்டு இப்போது அந்த திட்டத்தை குறை கூறுவது வெட்கக்கேடானது என்றார்.
Dear RM, what’s shameful is your boss silencing you. Please tell us :
— Office of RG (@OfficeOfRG) November 18, 2017
1. Final price of each Rafale jet?
2. Did PM take CCS permission before announcing purchase in Paris?
3. Why PM bypassed experienced HAL & gave the deal to AA rated businessman with no defence experience?
இதற்கு, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில் நேற்று பதிலடி கொடுத்துள்ளார். அதில் அவர் கூறுகையில், எது வெட்கக் கேடானது உங்கள் பாஸ் (பிரதமர் மோடி) உங்களை அமைதியாக்கியதுதான் வெட்கக் கேடானது என்று கூறியுள்ள ராகுல் அதில் 3 கேள்விகளையும் கேட்டுள்ளார்.
ரபேல் போர் விமான ஒப்பந்தம் பற்றி பாரீஸில் பிரதமர் மோடி அறிவிக்கும் முன்பாக, அமைச்சரவை குழுவின் அனுமதியை பெற்றிருந்தாரா? ஒப்பந்தத்தின்படி, ஒரு ரபேல் விமானத்தின் இறுதி விலையை வெளிப்படையாக கூற முடியுமா? பொதுத்துறை நிறுவனமான எச்ஏஎல்-ஐ புறக்கணித்துவிட்டு, எந்த முன் அனுபவமும் இல்லாத பிரபல தொழிலதிபர் நிறுவனத்திற்கு விமான பாகங்கள் இணைக்கும் ஒப்பந்தத்தை பிரதமர் கொடுத்தது ஏன்? என கேட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications