மோடிஜி! வெளிநாட்டு பயணத்தில் நீங்க ரொம்ப பிஸி.. நாங்களோ விவசாயிகளுடன்.. போட்டு தாக்கும் ராகுல்
லக்னோ: பிரதமர் நரேந்திர மோடி தமது வெளிநாட்டு பயணத்தில் மிகவும் பிசியாக இருக்கும் நிலையில் காங்கிரஸ் கட்சி மட்டும்தான் விவசாயிகளுக்காக விவசாயிகளுடன் நின்று போராடுகிறது என்று அக்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தாக்கியுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் விவசாயிகளுக்காக பாதயாத்திரையை தொடங்கிய ராகுல் பேசியதாவது:

உங்களுக்காக செத்து மடிவோம்
பிரதமர் நரேந்திர மோடி இங்கிலாந்துக்கும் பிற நாடுகளுக்கும் பயணம் மேற்கொள்ளும் நிலையில் ராகுல் காந்தி இங்கே உங்களுக்காக உங்களுடன் நின்று கொண்டிருக்கிறேன்.
நாங்கள் எப்போதும் உங்களுடன் இருப்போம். உங்களுக்காக செத்து மடியவும் காங்கிரஸ் தொண்டர்கள் தயாராக இருக்கிறார்கள்.

கோட் சூட் அரசு
ஏழைகள், விவசாயிகள் ஒடுக்கப்பட்டு மகிழ்ச்சியற்று வாழும் இந்த இந்தியாவை காண நாங்கள் விரும்பவில்லை. எங்களுக்கு கோட் சூட் அரசாங்கம் தேவையில்லை.

மோடி மீது தாக்கு
லோக்சபா தேர்தலின் போது பிரதமர் மோடியை ஏராளமானோர் ஆதரித்தார்கள்.. இந்தியாவையே மாற்றப் போவதாக அவர் கூறினார்.. நல்ல காலம் நிச்சயம் வரும் என்று நம்பிக்கையோடு கூறினார்.. அந்த நல்ல காலம் வந்ததா? லண்டன், சிங்கப்பூர், அமெரிக்கா என பல நாடுகளுக்கும் போகிறார் பிரதமர் மோடி... உங்களுக்கான அந்த நல்ல காலம் வந்ததா?
|
அகிலேஷ் யாதவுக்கு...
உத்தரப்பிரதேச அரசு, கரும்பு விவசாயிகளுக்கு அளித்த உறுதிமொழிகளை, அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். இந்த மாநிலத்தின் முதல்வர் அகிலேஷ் யாதவ், மாற்றத்தைக் கொண்டுவருவதாக வாக்குறுதி அளித்தார்... உங்களுக்கு இன்னமும் ஒன்றரை ஆண்டுகாலம் இருக்கிறது.. மக்களிடம் விவசாயிகளிடம் போய் அவர்களது குறைகளைக் கேட்டு தீர்வு காணங்கள்.. மூடப்பட்ட கரும்பாலைகளைத் திறந்து இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்குங்கள்.
இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.
-
லம்பாக அமவுண்டை அமுக்கிய தலைகள்.. ராகுலுக்குப் போன மெசேஜ்! அடுத்தடுத்த ஆக்ஷனுக்கு தயாராகும் காங்.,! -
தமிழக காங்கிரஸ் தலைவர் மாற்றம்.. புதிய தலைவர் மாணிக்கம் தாகூர்? ராகுல் காந்தி கிரீன் சிக்னல்? -
PM Modi: துரந்தர் பிஜிஎம் போட்டு மோடியை வரவேற்ற பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான்! பரவும் வீடியோ! -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது?












Click it and Unblock the Notifications