அல்வார்: 6 கி.மீ தூரத்தை 3 மணி நேரமாக கடந்த போலீஸ்.. இதுதான் புதிய இந்தியாவா... ராகுல் தாக்கு
அல்வார் சம்பவத்தில் 6 கி.மீ. தூரத்தை ஆற அமர 3 மணி நேரமாக போலீஸ் கடந்ததால்தான் அவர் உயிரிழக்க நேரிட்டது என்று ராகுல் குற்றம்சாட்டினார்.
மும்பை: பசு காவலர்களால் கடுமையாக தாக்கப்பட்ட அல்வாரை மருத்துவமனையில் உடனடியாக கொண்டு செல்லாமல் போலீஸார் ஆற அமர டீக்குடித்துவிட்டு 6 கி.மீ. தூரத்தை 3 மணி நேரமாக கடந்ததுதான் புதிய இந்தியாவா என்று ராகுல்காந்தி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
அரியாணா மாநிலம் கோல்கான் பகுதியைச் சேர்ந்தவர் அக்பர் கான் (28). இவரும் இவரது நண்பர் அஸ்லாம் ஆகியோரும் சேர்ந்து ராஜஸ்தானின் அல்வாரில் லாலாவண்டி கிராமத்தில் காட்டு பகுதியில் இரு மாடுகளை வாங்கிக் கொண்டு அவர்களது கிராமத்துக்கு திரும்பி கொண்டிருந்தனர்.

போலீஸார்
அப்போது அங்கு அவர்களை பசு தீவிரவாதிகள் வழி மறித்தனர். பின்னர் அவர்களை கடுமையாக தாக்கினர். இதையடுத்து அஸ்லாம் மட்டும் எப்படியோ தப்பி ஊருக்குள் வந்து நடந்தவற்றை கூறினர். இதுகுறித்து தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்றனர்.

உயிருக்கு போராட்டம்
அங்கு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அக்பர் கானை முதலில் மருத்துவமனையில் சேர்ப்பதற்கு பதிலாக மாட்டை கொண்டு சென்று கொட்டகையில் அடைத்தனர். அதன்பின்னர் உயிருக்கு போராடியவருடன் நடுவழியில் இறங்கி டீக்குடித்துவிட்டு சென்றனர்.

ராகுல் காந்தி கண்டனம்
இதையடுத்து 6 கி.மீ தூரம் கொண்ட மருத்துவமனையில் 6 மணி நேரத்தில் சென்றடைந்தனர். இதனிடையே அக்பர் கான் உயிரிழந்தார். போலீஸாரின் இச்செயலை ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்தார்.

டீக்குடித்தனர்
இதுகுறித்து ராகுல்காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில் 6 கி.மீ. தூரம் கொண்ட மருத்துவமனையை 3 மணி நேரமாக போலீஸார் கடந்தனர். ஏன்? மருத்துவமனைக்கு செல்லும் வழியில் டீக்குடித்தனர்.
|
வெறுப்பு
இதுதான் மோடியின் குரூர புதிய இந்தியா. மனிதாபிமானம் வெறுப்பாக மாறிவிட்டது. மக்கள் நசுக்கப்பட்டு இறுதியில் உயிரிழக்கின்றனர் என்று ராகுல் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
-
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு












Click it and Unblock the Notifications