ஆஸ்தான குருவுக்கே மதிப்பு கொடுக்காதவர் பிரதமர் மோடி- ராகுல் கடும் தாக்கு
தனது குருவுக்கே மரியாதை கொடுக்காதவர் பிரதமர் மோடி என்று ராகுல் காந்தி கடுமையாக விமர்சனம் செய்தார்.
Recommended Video

மும்பை: பிரதமர் நரேந்திர மோடி தனது குருவுக்கே மரியாதை கொடுக்காதவர் என்று ராகுல் காந்தி கடுமையாக விமர்சனம் செய்தார்.
மும்பையில் கோரேகான் என்ற இடத்தில் காங்கிரஸ் கட்சியின் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில் நான் இதை சொல்லக் கூடாதுதான், ஆனால் சொல்வேன். அத்வானிக்காக நான் வருத்தப்படுகிறேன்.
மோடியின் ஆஸ்தான குரு யார் என்பது அனைவருக்குமே தெரியும்- அத்வானிதான். ஆனால் பிரதமர் மோடியோ முக்கிய விழாக்களில் கூட அத்வானிக்கு மரியாதை கொடுப்பதில்லை. ஆனால் மோடியை விட அத்வானிக்கு நான் மரியாதை கொடுக்கிறேன். சில விழாக்களில் அவருடனேயே இருக்கிறேன்.

பிரதமராக இருந்தவர்
வாஜ்பாயை எதிர்த்து யார் போட்டியிட்டது. நமது காங்கிரஸ் கட்சிதான். ஆனால் இப்போது அவருக்கு உடல்நிலை சரியில்லை. நான்தான் முதல் ஆளாக சென்று அவரை சந்தித்தேன். நம்மை எதிர்த்து வாஜ்பாய் போட்டியிட்டிருக்கலாம், ஆனால் அவர் தேசத்துக்காக பாடுபட்டவர். இந்த நாட்டின் பிரதமராக இருந்தவர். அவரை நாம் மதிக்க வேண்டும் என்றார் ராகுல்.

ராகுல்காந்தி
இதுகுறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் அனில் பலூனி கூறுகையில் ராகுல் காந்தி கீழ்த்தரமான அரசியலை கடைப்பிடிக்கிறார். ஆர்எஸ்எஸ் அமைப்பின் விழாவில் கலந்து கொண்ட பிரணாப் முகர்ஜி காங்கிரஸ் தலைவர்களால் சில அதிருப்திகளை சந்தித்தார். அரசியல் குறித்து ராகுல் காந்தி எங்களுக்கு பாடம் எடுக்கத் தேவையில்லை.

பழம்பெரும் காங்கிரஸ்
அவர் எந்த மாதிரி அரசியலை பின்பற்ற வேண்டும் என்பது கூட அவருக்கு தெரியவில்லை போலும். பழம்பெருமையான காங்கிரஸ் கட்சியின் தலைவர் நடந்து கொள்ளும் விதம் குறித்து இந்த நாடே உற்று நோக்கியுள்ளது என்றார்.

ராகுல் சுட்டிக்காட்டினார்
திரிபுரா முதல்வர் பதவியேற்பு விழாவில் வருகை தந்த மோடிக்கு எல் கே அத்வானி வணக்கம் தெரிவித்தபோது அதை மோடி கண்டுகொள்ளாமல் நகர்ந்தது குறிப்பிடத்தக்கது. இதைத்தான் ராகுல்காந்தி தற்போது சுட்டிக் காட்டியுள்ளார்.
-
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications