உ.பி. மதக் கலவரங்கள்: நாடாளுமன்றத்தில் இன்று விவாதம்?
டெல்லி: காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கிளப்பி வைத்த உத்தரப்பிரதேச மத வன்முறைகள் தொடர்பான குற்றச்சாட்டு குறித்து நாடாளுமன்றத்தில் இன்று விவாதம் நடைபெறக் கூடும் எனத் தெரிகிறது.
நாடாளுமன்ற லோக்சபாவில் கடந்த புதன்கிழமையன்று கேள்வி நேரத்தை ஒத்தி வைத்துவிட்டு, நாட்டில் அதிகரித்து வரும் மதக் கலவரம் குறித்து விவாதிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் சார்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்டிருந்தது.
இதற்கு லோக்சபா சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அனுமதி மறுத்தார். இதையடுத்து, தனது இருக்கையில் இருந்து எழுந்த ராகுல், கேள்வி நேரத்தை நடத்த விடாமல் பிரச்சினை எழுப்பினார். இதைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு பேட்டியளித்த ராகுல், மோடி ஆட்சிக்காலத்தில் மட்டும் உத்தரப்பிரதேசத்தில் 600 மத வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. தேர்தல் ஆதாயத்துக்காக இத்தகைய வன்முறை சம்பவங்கள் தூண்டிவிடப்படுகின்றன என்றார்.
இதற்கு பாரதிய ஜனதா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால் மார்க்சிஸ்ட் தலைவர் சீதாராம் யெச்சூரியோ, உள்துறை அமைச்சக புள்ளி விவரப்படியே 623 மத வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளன. இவற்றில் பெரும்பாலானவை இடைத்தேர்தல் நடைபெற உள்ள இடங்கள் என்று கூறியிருந்தார்.
இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் இன்று விவாதிக்கப்படக் கூடும் என்று கூறப்படுகிறது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications