ஹத்ராஸ் சென்ற ராகுல், பிரியங்கா காந்தி எந்த சட்டத்தின் கீழ் கைது?

Subscribe to Oneindia Tamil

நொய்டா: உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் பாலியல் வன்கொடுமையால் இறந்த பெண்ணின் குடும்பத்துக்கு ஆறுதல் சொல்ல சென்ற ராகுல் காந்தியை போலீசார் தடுத்து நிறுத்தினர். அவரை வழிமறித்து போலீசார் கீழே தள்ளியதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

Rahul Gandhi was pushed to the ground by the police personnel.

உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டு இறந்த பெண்ணின் குடும்பத்துக்கு ஆறுதல் கூறுவதற்கு இன்று காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி இருவரும் சென்றனர். இந்த மாவட்டத்தில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதால், செல்லக் கூடாது என்று அவர்கள் சென்ற வாகனங்ககளை போலீசார் வழி மறித்தனர்.

Rahul Gandhi was pushed to the ground by the police personnel.

இதையடுத்து இருவரும் இறங்கி நடந்தே சென்றனர். உத்தரப் பிரதேசம் எல்லை கிரேடர் நொய்டா பகுதியில் போலீசார் ராகுலை வழிமறித்தபோது, அவரை கையால் தள்ளினர். அப்போது ராகுல் காந்தி நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதனால் அந்த இடத்தில் பதற்றம் ஏற்பட்டது. இவர்களுடன் காங்கிரஸ் தொண்டர்கள் பெரிய அளவில் சென்று கொண்டு இருந்தனர். போலீசாரின் நடவடிக்கையை எதிர்த்து அந்த இடத்தில் அவர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து யமுனா எக்ஸ்பிரஸில் சென்று கொண்டு இருந்த ராகுலை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது, ''ஹத்ராஸ்க்கு நான் மட்டும் தனியாக செல்கிறேன் வழியை விடுங்கள். எந்த சட்டத்தின் கீழ் என்னை கைது செய்கிறீர்கள்'' என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த போலீசார், ''188 ஐபிசி சட்டத்தின் கீழ் கைது செய்கிறோம்'' என்று தெரிவித்தனர்.

Rahul Gandhi was pushed to the ground by the police personnel.

சிறை

188 ஐபிசி சட்டத்தின் கீழ் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டு இருக்கிறார். அரசு ஊழியரால் முறையாக அறிவிக்கப்பட்ட கட்டளைக்கு கீழ்ப்படியாமல் இருத்தலின் கீழ் எடுக்கப்படும் நடவடிக்கை ஆகும் இது. இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டால் ஒரு மாத சிறை தண்டனை அல்லது ரூ. 200 அபராதம் விதிக்கப்படும். அல்லது இரண்டும் விதிக்கப்படும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+