விவசாயம் தெரியாத ராகுலுக்கு பிரதமராகும் தகுதி இல்லை: பஞ்சாப் முதல்வர் பாதல்
பதின்டா: விவசாயத்தைப் பற்றி ஒன்றும் தெரியாத ராகுல் காந்திக்கு பிரதமராகும் தகுதி இல்லை என்று பஞ்சாப் முதலமைச்சர் பிரகாஷ் சிங் பாதல் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தில் பா.ஜ.க.-அகாலிதளம் கூட்டணி அரசு நடைபெற்று வருகிறது. இதனை பிரகாஷ் சிங் பாதல் தலைமையேற்று நடத்தி வருகிறார். இந்நிலையில் பஞ்சாப் மாநிலம் பதின்டாவில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டார் பாதல்.

அப்போது அவர் பேசியதாவது :-
‘கிட்டத்தட்ட 60 சதவீதம் பேர் கிராமத்தில் வாழும் ஒரு நாட்டில் அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளை பற்றி அறியாதவரால் ஆட்சி செய்ய முடியாது. பொருளாதார ஊக்குவிப்பு நடவடிக்கைகளை காங்கிரஸ் மேற்கொள்ள மறுத்ததால் தொழிற்துறைகள் முடங்கியுள்ளன. பஞ்சாப் விவசாயிகள் ரூ.32,000 கோடி கடனில் சிக்கி தவித்து வருகின்றனர்.
உணவு உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு பெறுவதற்கு பங்களிப்பை அளித்து வரும் பஞ்சாப்பிற்கு காங்கிரஸ் பரிசு தருவதற்கு பதிலாக பாரபட்சமான அணுகுமுறையை கையாளுகிறது. ராகுல் காந்திக்கு அரசியலில் அனுபவம் கிடையாது. நாட்டின் அடிப்படை நிலப்பரப்பை பற்றியும் தெரியாது. நம் நாட்டிற்கு தற்போது உறுதியான தலைமை தேவை. அதற்கு மோடி ஒருவரே நம்பிக்கை ஒளியாக திகழ்கிறார்".என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
-
தவெகவை ஏன் எதிர்க்கிறீர்கள்? வாரிய பதவி கேட்டு வாங்குங்க! ஸ்ரீநிதிக்கு காங்கிரஸ் நிர்வாகி அட்வைஸ் -
ஏன் பெட்ரோல் விலை 10 நாளில் ரூ.7 உயர்வு? நஷ்டத்தை சொல்லுவீங்களா? மத்திய அரசை சாடிய மாணிக்கம் தாகூர் -
23 தொகுதிகளில் காங்கிரஸ் தோல்வி! தேர்தல் நிதியில் முறைகேடு? ஐவர் குழு அமைப்பு! வேட்பாளர்கள் ஷாக் -
விஜய்யே பண்ணாலும் தப்பு தப்பு தான்.. குதிரை பேரத்தை நியாயப்படுத்தக் கூடாது! ஃபயர் மோடில் ஜோதிமணி! -
"கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும்".. திமுகவுக்கு காங்கிரஸ் அமைச்சர் ராஜேஷ்குமார் பதிலடி! -
“தேர்தல் படுதோல்விக்கு பிறகு கூட.. திமுக பாடம் கற்கவில்லை!” காங். அமைச்சர் ராஜேஷ்குமார் சாடல்! -
100 விஜய் வந்தாலும் மேகதாது அணையை தடுக்க முடியாது.. சவால் விட்ட கர்நாடகா காங்கிரஸ் எம்எல்ஏ -
காங்கிரஸ் உண்டு கொழிக்கும் ஒட்டுண்ணி! பயணிக்கும் படகிலேயே ஓட்டை போடும் அறிவாளிகள்! வெளுத்த திமுக -
“மாணிக்கம் தாகூர் சொல்வது அப்பட்டமான பொய்.. காங்கிரஸ்காரர்கள் நன்றி கெட்டவர்கள்”.. விளாசிய திமுக! -
காங்கிரஸ் இல்லாத தூத்துக்குடி மாவட்டமாக மாற்றிக் காட்டுவேன் - அனிதா ராதாகிருஷ்ணன் எடுத்த சபதம்! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
அஷ்டமத்து சனி ஓவர்! இனிதான் விஜய் ஆட்டம் ஆரம்பம்! ஆட்சியை இழக்கவும் தயங்க மாட்டார்! ஷெல்வி கணிப்பு












Click it and Unblock the Notifications