For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நீ பேசுனது தப்புண்ணா... ராகுல் காந்திக்கு வருண் காந்தி கண்டனம்

Google Oneindia Tamil News

Rahul's comments insulted PM: Varun
கொல்கத்தா: பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அமைச்சரவை எடுத்த முடிவை நான்சென்ஸ் என்று ராகுல் காந்தி கூறியது, பிரதமரை அவமானப்படுத்தும் செயலாகும் என்று ராகுலின் ஒன்று விட்ட சகோதரரும், பாஜக எம்.பியுமான வருண் காந்தி கூறியுள்ளார்.

இதுகுறித்து வருண் காந்தி கருத்து தெரிவிக்கையில், தண்டனை விதிக்கப்பட்ட எம்.பிக்கள், எம்.எல்.ஏக்களைக் காக்கும் வகையிலான அவசரச் சட்டம் குறித்து ராகுல் காந்தி தெரிவித்துள்ள கருத்துக்கள் தவறானவை. இதன் மூலம் பிரதமரையும், நாட்டையும் அவர் அவமதித்துள்ளார்.

மேலும் பிரதமர் வெளிநாட்டில் முக்கிய சந்திப்புகளில் ஈடுபட்டிருக்கும் நிலையில் அவர் குறித்து ராகுல் காந்தி கருத்து தெரிவித்திருப்பது பிரதமரை அவமதிக்கும் செயலாகும். நாட்டுக்கும் இது அவமானமாகும.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசும், மேற்கு வங்கத்தின் திரினமூல் காங்கிரஸ் அரசும் மிகவும் ஊழல் வாய்ந்ததாக உள்ளன. மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற இவை இரண்டும் தவறி விட்டன என்றார் வருண் காந்தி.

English summary
BJP MP Varun Gandhi on Sunday hit out at Congress vice-president Rahul Gandhi saying his remark calling the ordinance on shielding convicted MLAs and MPs as "nonsense" was an insult to the nation and Prime Minister Manmohan Singh. The BJP leader, who was in Kolkata to meet party leaders ahead of the 2014 Lok Sabha elections, was quoted by party leaders as saying: "The act of the Congress vice president insulted the Prime Minister when he was in a meeting overseas and thus shamed the nation as well."
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X