நிமிடத்திற்கு 7200 டிக்கெட்டுக்கள்... அமலுக்கு வந்தது ‘அடுத்த தலைமுறை இ -டிக்கெட் திட்டம்’
டெல்லி: பொதுமக்கள் பயனடையும் வகையில் ரயில்வேயில் ஒரே நிமிடத்தில் 7,200 பயணச்சீட்டுகள் முன்பதிவு செய்யும், ‘அடுத்த தலைமுறை மின்னணு பயணச்சீட்டுத் திட்டம்' நேற்று முதல் அமலுக்கு வந்தது.
கால்கடுக்க வரிசையில் நின்று பயணச் சீட்டு பதிவு செய்யும் முறையை இணையதள பயணச் சீட்டு பதிவு முறை எளிதாக்கியது. ஆனபோதும், குறைந்த வேகம் காரணமாக இணையதள பயணச்சீட்டு முன்பதிவும் மக்களுக்கு சில அசௌகரியங்களைத் தந்து வந்தது.
அதனைக் களையும் வகையில் ‘அடுத்த தலைமுறை மின்னணு பயணச் சீட்டுத் திட்டம் அறிமுகப் படுத்தப் பட்டது. இத்திட்டத்தை நேற்று மத்திய ரயில்வேத் துறை அமைச்சர் சதானந்த கவுடா தொடங்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து அவர் பேசியதாவது :-
மின்னணு மயம்...
நாட்டின் வளார்ச்சியில் ரயில்வே துறையின் பங்கினை கருத்தில் கொண்டே இத்துறையின் அனைத்து செயல்பாடுகளையும் மின்னணு மயமாக்க வேண்டும் என்பதை பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார்.
ஆய்வு...
ரயில்வே ஊழியர்களுக்காக மருத்துவ நிர்வாகத் தகவல் முறையைக் கொண்டு வருவது குறித்து ஆராய்ந்து வருகிறேன்' எனத் தெரிவித்தார்.
ரூ. 180 கோடி செலவில்...
இந்த அடுத்த தலைமுறை மின்னணு பயணச் சீட்டுத் திட்டம், மத்திய ரயில்வே தகவல் அமைப்பால் ரூ. 180 கோடி செலவில் உருவாக்கப் பட்டுள்ளது.
முன்பதிவு...
இதன் மூலம் நிமிடத்திற்கு 7,200 பயணச் சீட்டுகள் முன்பதிவு செய்ய இயலும். பழைய முறைப்படி ஒரு நிமிடத்தில் 2000 பயணச் சீட்டுகளே முன்பதிவு செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
பலமடங்கு பயன்...
அதேபோல், முன்னதாக ஒரே நேரத்தில் 40,000 பேர் மட்டுமே பயனடைந்து வந்த நிலை மாறி, இப்புதிய திட்டம் மூலம் 1,20,000 பேர் பயனடைய வாய்ப்பு உள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications