டீசல் விலை குறைந்தாலும்... ரயில் கட்டணத்தை குறைக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு
பெங்களூரு: டீசல் விலை குறைந்து இருந்தாலும் ரயில் கட்டணத்தை குறைக்க வாய்ப்பு இல்லை என மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார்.
பெங்களூருவில் புதிய ரயில்களின் சேவையை தொடங்கி வைக்கும் விழாவில் மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு கலந்து கொண்டார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்தார் சுரேஷ் பிரபு. அப்போது அவர் கூறியதாவது:-

பயணிகளுக்கான செலவில் இருந்து 50 சதவீதத்தை மட்டுமே ரயில்வே துறை திரும்ப பெறுகிறது. பயணிகளுக்கு ஏற்கனவே அதிகளவில் மானியம் வழங்கப்படுகிறது. அதனால் டீசல் விலை குறைந்து இருந்தாலும் ரயில் கட்டணம் குறைக்க வாய்ப்பு இல்லை. அதிவேக ரயில் சேவையை தொடங்க அரசு தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறது.
பயணிகள் ரயில் மற்றும் சரக்கு ரயில்களின் வேகத்தையும் அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விரைவு ரயில்கள் அதிக நிறுத்தங்களில் நிற்பதால் அதன் வேகத்தை அதிகரிக்க முடியவில்லை. வருகிற ரயில்வே பட்ஜெட்டில் புதிய செயல் திட்டங்கள் மற்றும் புதிய திட்டங்கள் அறிவிக்கப்படும்.
அவுரா ரயில் நிலையத்தில் மாற்றுத்திறனாளி ஒருவரை ரயில்வே பாதுகாப்பு படையினர் தாக்கி இருந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பயணிகளிடம் தவறான முறையில் நடந்துகொள்ளக்கூடாது என்று பாதுகாப்பு படையினருக்கு உத்தரவிட்டுள்ளோம். மாற்றுத்திறனாளிகளிடம் மனித நேயத்துடனும், மிகவும் மரியாதையுடனும் நடந்துகொள்ள வேண்டும் என்று கூறியுள்ளேன். யாராவது ஒழுங்கீனமாக நடந்து கொண்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
கடந்த காலங்களில் இவ்வாறு ஒழுங்கீனமாக நடந்து கொண்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. ரயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு இருப்பதால் இதுபோல் ஒழுங்கீனமாக நடந்து கொள்பவர்களை அடையாளம் கண்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உதவுகிறது.
பயணிகளிடம் மனித நேயத்துடனும், மரியாதையுடனும் நடந்துகொள்ளும் வகையில் ரயில்வே பாதுகாப்பு படையினருக்கு பயிற்சி வழங்கும் திட்டத்தை தொடங்கி இருக்கிறோம்' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications