அடுத்த 5 ஆண்டுகளில் 'டிக்கெட்டை' முழுமையாக 'கிழித்து'ப் போட ரயில்வே முடிவு!
பெங்களூர்: அடுத்த 5 ஆண்டுகளுக்குள் ரயில்வே துறை காகிதமில்லாத நிர்வாகமாக மாற்றம் செய்யப்படும் என்று ரயில்வே துறை அமைச்சர் சதானந்த கெளடா தெரிவித்தார்.
இதுகுறித்து பெங்களூரில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
ரயில்வே துறையில் கோடிக்கணக்கான ரூபாய் பணப் பரிமாற்றம், கொள்முதல் செய்யப்படுகின்றன. இதில் ஊழல் நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.

ரூ.25 லட்சத்துக்கு மேல் இ-டெண்டர்
எனவே, ஊழலை ஒழிக்கும் நோக்கில், ரூ. 25 லட்சத்துக்கும் அதிக மதிப்பிலான பொருள்களைக் கொள்முதல் செய்தால், அவற்றை இ-டெண்டர் மூலம் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஆன்லைன் டிக்கெட் வசதி
தினந்தோறும் சுமார் 2.3 கோடி மக்கள் ரயிலில் பயணம் செய்கின்றனர். ஆன்லைன் மூலம் நிமிடத்துக்கு 7200 பேர் பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் வசதி செய்யப்பட்டிருந்தது. இதை நிமிடத்துக்கு 1,20,000ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்வோர் அதிகரித்துள்ளனர்.

காகித பயன்பாடு தவிர்ப்பு
இதுதவிர அலைபேசி சேவைகள் மூலமாகவும் பயணச்சீட்டு முன்பதிவு செய்து கொள்ளலாம். இதுபோன்ற நடவடிக்கைகளின் மூலமாக படிப்படியாக இன்னும் ஐந்தாண்டுகளில் காகிதமே பயன்படுத்தாமல் டிக்கெட் பெறும் வசதி முழுமையாக அமல்படுத்தப்படும்.

ஊழல் நடைபெறாது
ரயில்வே துறை அமைச்சராக நான் பொறுப்பேற்றது முதல் இந்தத் துறையில் எந்தவித ஊழலுக்கும் இடம் கொடுக்காமல் கண்காணித்து வருகிறேன். ஆட்சி நடத்துபவர்கள் பாரபட்சமில்லாமல் இருந்தால், நிர்வாகமும் பாரபட்சமின்றி இருக்கும். இவ்வாறு சதானந்த கெளடா தெரிவித்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications