சூறைக்காற்றுடன் சுழன்று அடித்த மழை.. ஸ்தம்பித்தது இந்தியாவின் ஐடி தலைநகரம்!
பெங்களூரு: பெங்களூருவில் பெய்த கனமழையால், நகரமே ஸ்தம்பித்தது. மெல்லமெல்ல, இன்று காலைதான் இயல்பு வாழ்க்கை அங்கு திரும்பியுள்ளது.
பெங்களூருவில் நேற்றிரவு சுமார் 6.30 மணியளவில் இடியுடன் கூடிய கனமழை கொட்டத் தொடங்கியது. இந்த மழையோடு காற்றும் வேகமாக வீசியது. இதனால் அலுவலகம் முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தோர் சாலையோரங்களில் பைக்குகளை நிறுத்திவிட்டு கடைகளுக்குள் தஞ்சமடைந்தனர். காரில் செல்வோருக்கும், சாலையே தெரியாத அளவுக்கு, பலத்த காற்றுடன் மழை குறுக்கிட்டது. மணிக்கு 21 கிலோமீட்டர் வேகத்தில் காற்றின் வேகம் இருந்தது.

போக்குவரத்து பாதிப்பு
இந்த மழை காரணமாக, நகரின் பல்வேறு இடங்களில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆங்காங்கு மரக்கிளைகள் உடைந்து விழுந்தன. கேஜி ரோட்டில் கட்டிடம் இடிந்து மத்திய பஸ் நிலையமான மெஜஸ்டிக் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சாவு
கொரகுண்டேபாளையா என்ற பகுதியில் வீடு இடிந்து விழுந்ததில் முனிவெங்கடப்பா என்பவர் உயிரிழந்தார். சாலையில், முழங்கால் அளவுக்கு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

ஆலங்கட்டி மழை
யஷ்வந்த்பூர், மத்திகெரே, ஹெப்பால், யலகங்கா போன்ற பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்த்துள்ளது. சுமார் ஒரு செ.மீ நீளத்துக்கு அந்த கட்டிகள் இருந்தன. மழையையும் பொருட்படுத்தாது, ஆலங்கட்டி மை கட்டிகளை எடுக்க மக்கள் தெருக்களில் அலைமோதினர்.

52 மி.மீ மழை
காற்று மற்றும் மழை காரணமாக, நகரின் பல பகுதிகளில் 45 மரங்கள், 15 மின்கம்பங்கள், வேரோடு சாய்ந்தன. இரண்டே மணி நேரத்தில் நகரில் 52 மி.மீ மழை கொட்டி தீர்த்தது. எனவே, தாழ்வான பகுதிகளிலுள்ள வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. மழை மேலும், இரு நாட்களுக்கு தொடரும் என்று வானிலை இலாகா அறிவித்துள்ளது. பகலில் வானம் தெளிவாக இருக்கும், மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்யும்.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications