மகாராஷ்டிரா கட்சிகள் வயிற்றில் புளியை கரைத்த ராஜ்தாக்கரே! சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதாக அறிவிப்பு
மும்பை: சட்டசபை தேர்தலில் தமது கட்சி சார்பில் வேட்பாளர்களை களம் இறக்குவேன் என்றும், மெஜாரிட்டி கிடைத்தால் முதல்வராவேன் என்றும் மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ்தாக்கரே தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ராஜ் தாக்கரே நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
பொதுமக்கள் எங்கள் மீது அளவு கடந்த அன்பு வைத்து உள்ளனர். எங்கள் கட்சி மீது அதீத நம்பிக்கை கொண்டுள்ளனர்.

இதனால் மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் நான் போட்டியிடுவேன். அதிகாரம் எங்கள் வசம் ஒப்படைக்கப்பட்டால், தலைமையை ஏற்பதில் எனக்கு ஒன்றும் தயக்கம் இல்லை
இவ்வாறு ராஜ்தாக்கரே கூறினார்.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் ராஜ் தாக்கரே, பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு வெளிப்படையான ஆதரவு அளித்தார் ராஜ்தாக்கரே. இதன் காரணமாக பாரதிய ஜனதா போட்டியிட்ட தொகுதிகளில் ராஜ் தாக்கரே தன் கட்சி வேட்பாளர்களை நிறுத்தவில்லை.
அதே சமயம், சிவசேனாவை தோற்கடிக்கும் நோக்கத்தில் அக்கட்சி போட்டியிட்ட தொகுதிகளில் நவநிர்மாண் சேனா வேட்பாளர்களை ராஜ் தாக்கரே களமிறக்கினார்.
இருப்பினும், தேர்தல் முடிவு வெளியானபோது, நவநிர்மாண் சேனா படுதோல்வியை சந்தித்தது. அக்கட்சி சார்பில் போட்டியிட்ட பெரும்பாலான வேட்பாளர்களுக்கு ‘டெபாசிட்' கூட கிடைக்கவில்லை.
இந்த நிலையில், வர இருக்கும் சட்டசபை தேர்தலில் ராஜ் தாக்கரே முதல்வர் ஆசையுடன் தேர்தல் களம் பூண்டு இருப்பது அனைவரது புருவத்தையும் உயர்த்தி உள்ளது.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications