நிலமோசடி வழக்கில் இயக்குநர் ராஜமௌலிக்கு சம்மன்..24 ம் தேதிக்குள் நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவு
ஹைதராபாத்: இயக்குநர் ராஜமௌலிக்கு ஆந்திராவின் நாம்பல்லி நீதிமன்றம் சம்மன் அனுப்பி இருப்பது டோலிவுட்டில் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
சத்ரபதி, நான் ஈ, பாகுபலி போன்ற புகழ்பெற்ற படங்களை இயக்கியவர் ராஜமௌலி. தற்போது பாகுபலி 2 படத்தின் படப்பிடிப்புகளில் ராஜமௌலி பிஸியாக இருக்கிறார்.
இந்நிலையில் நிலத்தை தருவதாக தன்னிடம் பணத்தை வாங்கிக் கொண்டு ராஜமௌலி ஏமாற்றி விட்டதாக அவர் மேல் நாம்பல்லி நீதிமன்றத்தில் தயாரிப்பாளர் புவனேஸ்வர் என்பவர் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.
இந்த வழக்கில் 3 முறைக்கு மேல் ராஜமௌலிக்கு நோட்டிஸ் அனுப்பி அவர் ஆஜராகாததால் தற்போது நாம்பல்லி நீதிமன்றம் அவருக்கு சம்மன் அனுப்பி இருக்கிறது.

ராஜமௌலி
ஸ்டூடன்ட் நம்பர் 1 படத்தின் மூலம் இயக்குனராக டோலிவுட்டில் அறிமுகமானவர் ராஜமௌலி. தொடர்ந்து மகதீரா, நான் ஈ போன்ற படங்கள் மூலம் முன்னணி இயக்குநர் என்ற அந்தஸ்தை எட்டிப் பிடித்தார். கடந்த வருடம் வெளியான பாகுபலி படத்தின் மூலம் தற்போது உலகளவில் ராஜமௌலியின் புகழ் பரவியிருக்கிறது.
நிலம் விற்பனை
ஐதராபாத் பஞ்சார ஹில்ஸ் பகுதியில் ‘லோட்டஸ்னஹ' என்ற அபார்ட்மெண்ட் உள்ளது. இந்த அபார்ட்மெண்ட் கீழ்தளத்தில் உள்ள 1120 சதுர அடி பிளாட்டை 2011-ம் ஆண்டு விற்பதற்கு ராஜமௌலி முன்வந்தார்.இதனை அறிந்த சினிமா தயாரிப்பாளர் புவனேஸ்வர் அதனை வாங்க ரூ.42 லட்சத்துக்கு வாங்க முன்வந்தார்.
முறைகேடாக
புவனேஸ்வர் முன்பணமாக 2.7 லட்சத்தை ராஜமௌலியிடம் கொடுத்த பின்னர் தான் அந்த அபார்ட்மெண்ட் சட்ட விரோதமாக கட்டப்பட்டது என்பது அவருக்கு தெரியவந்தது. மேலும் மின்சார இணைப்பு இல்லை, சொத்துவரி கட்டவில்லை, அந்த இடத்தின் மீது கடன் இருக்கிறது போன்ற விவரங்கள் புவனேஸ்வருக்கு தெரியவந்திருக்'கிறது.
அவசரமாக
புவனேஸ்வர் இதுகுறித்து ராஜமௌலியிடம் கேட்டபோது அதற்கு பதில் சொல்லாத ராஜமௌலி அந்த இடத்தை அவசர அவசரமாக வேறு ஒருவருக்கு விற்பனை செய்துவிட்டார். இதனால் ஆதிரமடைந்த புவனேஸ்வர் தன்னை ஏமாற்றி பணம் பறித்ததாக ஆந்திராவில் உள்ள நாம்பல்லி நீதிமன்றத்தில் ராஜமௌலி மீது வழக்குத் தொடர்ந்தார்.
சம்மன்
இந்த வழக்கு விசாரணைக்காக ஆஜராகும்படி நாம்பல்லி நீதிமன்றம் ஏற்கனவே 3 முறை ராஜமலிவுக்கு நோட்டீசு அனுப்பியது. ஆனால், அவர் ஆஜராக வில்லை. இதையடுத்து வருகின்ற 24-ந் தேதிக்குள் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகும்படி அவருக்கு நீதிமன்றம் நேற்று சம்மன் அனுப்பியுள்ளது. மேலும் இந்த விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவுப்படி நாம்பல்லி போலீசார் ராஜமவுலி மீது 2 பிரிவில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தற்போது இந்த சம்மன் விவகாரம் டோலிவுட் உலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications