ராஜஸ்தான்: காங்கிரஸ் VS பாஜக-199 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக நாளை வாக்குப் பதிவு- பலத்த பாதுகாப்பு!
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் 199 சட்டசபை தொகுதிகளுக்கு நாளை ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெறுகிறது. ராஜஸ்தானில் வாக்குப் பதிவு நாளை நடைபெறுவதை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ராஜஸ்தான் மாநிலத்தில் 2018 சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. ராஜஸ்தானில் மொத்தம் 200 தொகுதிகள் உள்ளன. இம்மாநிலத்தில் பெரும்பான்மைக்கு தேவை 101 இடங்கள். 2018 தேர்தலில் காங்கிரஸ் 100 இடங்களிலும் பாஜக 73 இடங்களிலும் வெற்றி பெற்றன. 2013 தேர்தலில் காங்கிரஸ் வெறும் 21 இடங்களிலும் பாஜக 163 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தது.

ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் அரசு, முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் நடைபெற்று வருகிறது. பாஜக பிரதான எதிர்க்கட்சியாக இருந்து வருகிறது. இம்மாநிலத்தில் காங்கிரஸ், பாஜக இடையே நேரடி போட்டி கடுமையாக உள்ளது. இந்த கட்சிகளுடன் ஆம் ஆத்மி, பகுஜன் சமாஜ், ஓவைசியின் மஜ்லிஸ் கட்சி ஆகியவையும் களம் காண்கின்றன.
ராஜஸ்தானில் மொத்தம் 200 தொகுதிகளில் ஒரு தொகுதியில் வேட்பாளர் இறந்த காரணத்தால் 199 தொகுதிகளுக்கு நாளை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறும். இதற்காக 51,507 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 5,26,90,146 வாக்காளர்கள் இத்தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். நாளை நடைபெறும் வாக்குப் பதிவை நேரடியாக கண்காணிக்க 26,393 வாக்கு சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
ராஜஸ்தான் தேர்தலை கண்காணிக்க சுமார் 12 ஆயிரம் தேர்தல் அதிகாரிகள் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். சுமார் 2.75 லட்சம் பேர் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நாளை பதிவாகும் அனைத்து வாக்குகளும் டிசம்பர் 3-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் தீவிர பிரசாரம் செய்தனர். காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மூத்த தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா உள்ளிட்டோரும் தேர்தல் பிரசாரம் செய்தார். ராஜஸ்தான் தேர்தலில் பிரதமர் மோடியை கெட்ட சகுனம் கொண்டவர், பிக்பாக்கெட் என ராகுல் காந்தி பேசியது பெரும் சர்ச்சையானது. ராஜஸ்தான் தேர்தல் களத்தில் ஆளும் காங்கிரஸும், பாஜகவும் வாக்குறுதிகளை அள்ளி வீசி இருக்கின்றன.
ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தலைப் பொறுத்தவரை பொதுவாக, ஆளும் காங்கிரஸ் கட்சி பாஜகவிடம் ஆட்சியை பறிகொடுக்கும் என்கின்றன. இருப்பினும் காங்கிரஸ்-பாஜக இடையே கடும் போட்டி இருக்கும் என்பது அரசியல் பார்வையாளர்களின் பொதுவான கருத்து. ராஜஸ்தான் சட்டசபை தேர்தலை அமைதியாக நடத்துவதற்காக அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் முழு வீச்சில் செய்யப்பட்டுள்ளன.
-
அண்ணா ஆட்சி ஏன் சிறப்பு? என்ன சாதித்தார் அவர்? 1967க்கு பிறகான தரமான சம்பவங்கள் இதோ..! -
முடிவுக்கு வராத காங்கிரஸ் - திமுக சீட் ஷேரிங் பிரச்னை.. காங். தேர்வு செய்யும் 28 தொகுதிகளால் சிக்கல் -
வார்த்தைகளே பத்தலை.. தமிழ்நாட்டை விட்டு போறதை நினைக்கும் போது! 3 பக்க கடிதம் எழுதிய ஆர்.என்.ரவி -
உஷரய்யா உஷாரு.. பீகாரை வைத்து தமிழ்நாட்டில் பாஜக போடும் கணக்கு! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
அதிமுக கூட்டணியில் தவெக விஜய்? மத்திய அமைச்சர் எல்.முருகன் சொன்ன பதிலால் பரபரப்பு! -
NDA கூட்ட பேனரில் எடப்பாடி பழனிசாமி படம் புறக்கணிப்பு.. அதிர்ச்சியில் அதிமுகவினர்! என்னங்க நடக்குது? -
கச்சா எண்ணெய் விலை பேரல் 100 டாலர் தாண்டாத வரை.. பெட்ரோல், டீசல் விலை உயராது.. மத்திய அரசு விளக்கம்! -
ஆரம்பிக்கும் மூன்றாம் உலக போர்.. வெளியே வந்த டூம்ஸ்டே மீன்.. அலறும் உலக நாடுகள் -
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு












Click it and Unblock the Notifications