ராஜஸ்தான் சட்டசபை தேர்தல்- 75% வாக்குப்பதிவு
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் சட்டசபை தேர்தலில் 75% வாக்குகள் பதிவாகி இருந்தன.
ராஜஸ்தானில் உள்ள மொத்தம் உள்ள 200 தொகுதிகளில் 199 தொகுதிகளுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் 74.38% வாக்குகள் பதிவானதாக மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
மாநிலத்தில் அதிகபட்சமாக ஹனுமன்கர் தொகுதியில் 68.13% வாக்குகள் பதிவாகியுள்ளது. சிகார் தொகுதியில் 67.25%, பிரதாப்கர், ஜலவார், ராஜ்சமந்த் ஆகிய தொகுதிகளில் முறையே 65.72, 62.72 மற்றும் 61.52% வாக்குகள் பதிவாகியுள்ளன.

குறைந்த வாக்குப் பதிவு
சித்தோர்கர் தொகுதியில் குறைந்த அளவாக 25.10% வாக்குகள் பதிவாகியுள்ளது. ஒரு சில இடங்களில் வாக்குச்சாவடியை கைப்பற்றுதல், வன்முறையில் ஈடுபடுதல் போன்ற சம்பவங்கள் நடந்திருந்தாலும் பொதுவாக வாக்குப்பதிவு அமைதியாக நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக 50-க்கும் மேலான வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதடைந்திருந்ததாக வந்த புகாரை அடுத்து அவற்றுக்கு பதிலாக புதிய இயந்திரங்கள் வைக்கப்பட்டன.
துப்பாக்கிச் சூடு
மேலும் ஆல்வார் என்ற இடத்தில் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்தது. பரத்பூர் மாவட்டத்தில் உள்ள ரூப்வாஸ் பகுதியில் வாக்குச்சாவடியைக் கைப்பற்ற சில சமூக விரோதிகள் முயன்றனர். இதனால் சிறிது நேரம் வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டது.
மாநில முதல்வர் அசோக் கெலாட், ஜோத்பூர் தொகுதியில் மஹாமந்திர் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் தமது வாக்கை பதிவு செய்தார். ஜலவாரில் டோப்கானா பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் மாநில பா.ஜ.க. தலைவரும், முன்னாள் முதல்வருமான வசுந்தரா ராஜே, மகன் துஷ்யந்த் சிங் எம்.பி.யுடன் வந்து வாக்கை பதிவு செய்தார்.
கடந்த 2003ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் 68.18% வாக்குகளும், 2008ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் 66.49% வாக்குகளும் பதிவாகி இருந்தன.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications