எங்கும் காவிமயம்.. காங்கிரஸ் கோட்டையில் ஓட்டை போட்ட பாஜக! ஆட்டத்தையே மாற்றிய மேற்கு ராஜஸ்தான்
ஜெய்பூர்: கடந்த 2018 ராஜஸ்தான் தேர்தலில் காங்கிரஸுக்கு வெற்றி வாய்ப்பை கொடுத்த மேற்கு ராஜஸ்தானின் பெரும்பாலான தொகுதிகளை இம்முறை பாஜக கைப்பற்றி இருக்கிறது.
ராஜஸ்தான் மாநிலத்தில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சிகாலம் நிறைவடைவதை அடுத்து நவம்பர் 25 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் 75.45 சதவீத வாக்குகள் பதிவாகின. இன்று வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதுவரை வெளியான தேர்தல் முடிவுகளின்படி ராஜஸ்தானில் பாஜக பெரும்பான்மை பலத்துடன் வெற்றிபெற்று ஆட்சியை கைப்பற்றுவது உறுதியாகி இருக்கிறது.

இதுவரை வெளியான தேர்தல் முடிவுகளின்படி காங்கிரஸின் இந்த இழப்புக்கு பல்வேறு காரணங்களை அடுக்கலாம். கூட்டணி அமைக்காதது, தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகளை நம்பி தேர்தல் பிரச்சாரத்தின் தீவிரத்தை குறைத்தது, ஆளும் காங்கிரஸ் அரசின் மீதுள்ள அதிருப்தி என பல்வேறு காரணங்கள் உள்ளன. அதில் குறிப்பாக மேற்கு ராஜஸ்தான் பகுதியை மொத்தமாக இந்த தேர்தலில் காங்கிரஸ் பாஜகவிடம் பறிகொடுத்து உள்ளது.
ராஜஸ்தானின் மேவார், மார்வார், ஹடோடி, ஜோத்பூர், ஜெய்சல்மர், பைகாநெர் பகுதிகளை கொண்டதுதான் மேற்கு மண்டலம். பாலை வனப்பகுதிகள் அதிகம் கொண்ட இந்த மண்டலம் பாகிஸ்தான் எல்லையோரம் அமைந்து உள்ளன. கடந்த 2018 ஆம் ஆண்டு இந்த மேற்கு ராஜஸ்தான் பகுதியின் பெரும்பாலான இடங்களில் காங்கிரஸ் வெற்றிபெற்றதே அங்கு அக்கட்சி ஆட்சியை பிடிக்க காரணமாக இருந்தது. இந்த முறை அப்படியே வழித்து எடுத்ததைபோல் அந்த மண்டலத்தில் பாஜக வெற்றிபெற்று உள்ளது.
பாஜகவை பொறுத்தவரை ஜெய்சல்மாரில் சோட்டு சிங், பொக்ரானில் பிரதாப் பூரி, கொலயத்தில் அன்ஷுமன் சிங் பட்டி, பலோடியில் பப்பா ராம் பிஸ்னோய், கஜுவாலாவில் விஸ்வநாத் மேக்வால், பிகாநெர் மேற்கில் ஜிதானந்த் வியாஸ், பிகானெர் கிழக்கில் சித்தி குமார், லுன்கரன்சாரில் சுமித் கொதாரா, தங்கர்காரில் தாராசந்த், லோகாவத்தில் கஜேந்திர சிங், ஓசியானில் பெரா ராம் சவுதாரி, ஷெர்கரில் பாபு சிங் ரத்தோர், பச்பத்ராவில் அருண் சவுதாரி, சிவானாவில் ஹமீர் சிங் பாயல், ஜலோரில் ஜோகேஷ்வர் கார்க், குதா மலானியில் கிருஷ்ணன் குமார் விஸ்னோய், சோடனில் அது ராம் மேக்வால், சுமெர்பூரில் ஜொராராம் குமாவத், அஹோரில் சக்கன் சிங் ராஜ்புரோகித், சிரோஹியில் ஒடா ராம் தேவாசி, பாலியில் பூபேந்திர சிங், பிந்த்வாரா அபுவில் சமரம் ஆகியோர் வெற்றிபெற்று உள்ளார்கள்.












Click it and Unblock the Notifications