Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அத்வானியா அடங்கி போறதுக்கு? பாஜகவுக்கு எதிராக களமிறங்கும் 'ராஜ மாதா' வசுந்தர ராஜேவின் 'பாகுபலி'கள்!

Subscribe to Oneindia Tamil

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில் பாஜக வெல்லும் என கருத்து கணிப்புகள் திட்டவட்டமாக தெரிவிக்கின்றன. ஆனால் பாஜகவின் வெற்றிக் கனவுக்கு மாஜி முதல்வர் வசுந்தர ராஜேவும் அவரது பரிவாரங்களும் ஆகப் பெரும் வேட்டு வைக்கப் போகிறது என்கின்றன அம்மாநில தகவல்கள்.

ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு மீது அதிருப்தி அலை வீசுவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே 5 ஆண்டுகளாக சச்சின் பைலட் உள்ளிட்டோருடன் உட்கட்சி மோதலில் இடைவிடாமல் மோதி வருகிறவர் அசோக் கெலாட். இதனாலேயே ராஜஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை பறிகொடுக்கப் போகிறது காங்கிரஸ் என்கின்றன அரசியல் வட்டாரங்கள்.

Rajasthan Election: Vasundhara Raje to filed Supporters against BJP Candidates?

பாஜகவுக்கு சாதகம்: ராஜஸ்தானைப் பொறுத்தவரையில் காங்கிரஸ், பாஜக எனும் இருதுருவ அரசியல்தான். இப்போது ஆம் ஆத்மியும் களமிறங்கி இருக்கிறது. இதனால் இயல்பாகவே காங்கிரஸுக்கு எதிரான அதிருப்தி அலை என்பது பாஜகவுக்கு சாதகமாக இருக்கிறது.

அத்வானி முதல் வசுந்தர ராஜே வரை: ஆனால் பாஜகவோ தன் தலையில் தானே மண்ணை அள்ளிப் போடும் கதையாக செயல்படுகிறது என்பது அரசியல் பார்வையாளர்கள் கருத்து. பாஜகவில் 2014-ம் ஆண்டு மோடி-அமித்ஷா தலையெடுத்த பின்னர் அத்வானி உள்ளிட்ட சீனியர்கள் காணாமல் ஆக்கப்பட்டனர். இந்த வரிசையில் ஏராளமான பெருந்தலைகள் இருந்த இடம் தெரியாமல் ஓரம்கட்டப்பட்டுவிட்டனர். இவர்கள் பட்டியலில்தான் ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் வசுந்தர ராஜே சிந்தியாவையும் டெல்லி பாஜக மேலிடம் சேர்த்துவிட்டது.

ஒதுக்கப்பட்ட வசுந்தர ராஜே சிந்தியா: ராஜஸ்தான் சட்டசபை தேர்தல் தொடர்பான குழுக்கள் தொடங்கி வேட்பாளர்கள் பட்டியல் வரைக்கும் அத்தனையிலும் வசுந்தர ராஜே சிந்தியாவும் அவரது ஆதரவாளர்களும் ஒதுக்கி வைக்கப்பட்டுவிட்டனர். ராஜஸ்தானில் 7 எம்.பி.க்களையும் வேட்பாளர்களாக பாஜக களமிறக்கி இருக்கிறது. வசுந்தர ராஜே சிந்தியா ஒரு பொருட்டே அல்ல என்பதாகவே பாஜக தலைமை செயல்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

மகிழ்மதி ராஜமாதா போல ஆவேசம்: அதேநேரத்தில் இனியும் பொறுத்திருக்க முடியாது; நாம் நமது பலத்தைக் காட்டுவோம் என வசுந்தர ராஜே தரப்பு கோதாவில் குதிக்க முடிவு செய்துவிட்டதாம். அத்வானி போல அடங்கி இருக்க தேவையில்லை.. நிஜத்தில் நான் குவாலியர் மகாராணி- ராஜ மாதா.. எனக்கு எதிராகவா சதி செய்கிறீர்கள்? என்ற ரேஞ்சில் கோபத்துடன் இதுவே என் கட்டளை.. என் சாசனம் என 'மகிழ்மதி' தேசத்து ராஜமாதா போல தமது 'பாகுபலிகளை' அதிகாரப்பூர்வ பாஜக வேட்பாளர்களுக்கு எதிராக சுயேட்சைகளாக களமிறக்கப் போகிறாராம். ஆகக் குறைந்தபட்சம் 15 தொகுதிகளில் பாஜக வேட்பாளர்களை எதிர்த்து பாஜக அதிருப்தி வேட்பாளர்களை நிறுத்தப் போகிறாராம் வசுந்தர ராஜே என்கின்றன அரசியல் வட்டாரங்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+