வயிற்றில் 786.. தெய்வீக ஆட்டுக்கு விலை பேசிய கோடீஸ்வரர்கள்.. 1 கோடிக்கு கேட்டவரை அதிர வைத்த எஜமான்
ஜெய்ப்பூர்: ஒரு ஆடு அதிகபட்சம் எவ்வளவுக்கு விற்பனையாகும், ஒரு 10 ஆயிரம், 20 ஆயிரம், 30 ஆயிரம், ஏன் ஒரு லட்சம் வரைக்கும் கூட விற்பனையாகும். ஆனால் இங்க ஒரு ஆட்டை ஒரு கோடி வரை விலை பேசியிருக்காங்க. ஆனால் அந்த விவசாயி ஆட்டை தர மறுத்துவிட்டார்.
எதுக்காக இந்த ஆட்டை ஒரு கோடி கொடுத்து வாங்க தயாராக இருந்திருக்காங்க தெரியுமா, இந்த ஆட்டுக்குள்ள ஒரு மர்மம் ஒளிச்சிருக்காம்.. அப்படி என்ன மர்மம் ஒளிஞ்சிருக்கு அப்படீன்னு பார்ப்போம்.

ராஜஸ்தான் மாநிலம் சிரு மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராஜூ சிங், இவருகிட்ட ஒரு ஆடு இருக்கு, அந்த ஆட்டை வாங்க பலரும் போட்டி போட்டிருக்காங்க.. கிட்டத்தட்ட அந்த ஆட்டை வாங்க ஒரு கோடி வரைக்கும் விலை பேசியிருக்காங்க.. ஆனால் நீங்கள எவ்வளவு கொடுத்தாலும், இந்த ஆட்டை நான் தர மாட்டேன் என்று அந்த விவசாயி கூறியிருக்கிறார்.
இதுக்கு காரணம் என்னவென்று பார்த்தால், இயற்கையாகவே அந்த ஆட்டின் உடம்பில் 786 என்ற எண் இருக்கிறதாம். இந்த எண் இஸ்லாமை பொறுத்தவரை புனிதத்தை குறிக்கும் என்று சொல்கிறார்கள். அதனால் தான் இந்த ஆட்டை எப்படியாவது வாங்கிவிட வேண்டும் என்று பலரும் போட்டி போட்டிருக்கிறார்கள்.
இந்த ஆட்டுக்கு சாப்பிடுவதற்கு தினமும் மாதுளை, பப்பாளி, காய்கறிகள் போன்றவற்றை தினமும் கொடுத்து வருகிறார். இந்நிலையில் இந்த ஆட்டை எப்படியாவது வாங்கிட வேண்டும் என்று பலரும் முயற்சிக்கிறார்கள். இப்படி பல பேர் தனது ஆட்டை கேட்டுவருவதால், ஆட்டை ரொம்பவே பாதுகாப்பாக வைத்து பாதுகாத்து வருகிறார் ராஜூ சிங். அந்த ஆட்டை யாருக்கும் தர அவர் விரும்பவில்லை என்று கூறிவருகிறார்.
இந்த மாதிரியும் சில சம்பவங்கள் இதற்கு முன்பு நடந்துள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தில் ராய்பூர் பகுதியில் 70 லட்சம் வரை ஒரு ஆட்டை விலை பேசியிருந்திருக்காங்க.. அந்த ஆட்டின் உடம்பில் அல்லா,முகமது போன்ற வார்த்தைகள் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த ஆட்டை வாங்க பல பேர் முயற்சி செய்தார்கள்.
2019ஆம் ஆண்டு கோரக்பூரில் ஒரு ஆடு ரூ.8 லட்சம் வரை விலை பேசியிருக்காங்க. இங்கும் 'அல்லா' என்ற வார்த்தை இயற்கையாகவே உடலில் எழுதப்பட்டதாக ஆட்டின் உரிமையாளர் கூறியிருந்தார். இதுகுறித்து ஆட்டின் உரிமையாளர் முகமது நிஜாமுதீன் கூறும் போது "எங்கள்ஆடு 90 கிலோவுக்கு மேல் எடை கொண்டது, அதற்கு சல்மான் என்று பெயர் வைத்தோம். அந்த ஆட்டின் மீது இயற்கையாகவே 'அல்லா' மற்றும் 'முகமது' என்று எழுதப்பட்டுள்ளது. இதன் விலை ரூ. 8 லட்சம்" என்றார். இந்த மாதிரியான ஒரு சில சம்பவங்கள் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.அதேநேரம் எதற்காக இப்படி செய்கிறார்கள் என்பது பலரை யோசிக்கவும் வைக்கிறது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications