டெய்லர் கடைக்குள் நுழைந்து.. கன்னையாவின் கழுத்தை.. 2 மகன்களுக்கு அரசு வேலை.. அதிரடி முடிவு
டெய்லர் மகன்களுக்கு அரசு வேலை தருவதாக ராஜஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது
ஜெய்ப்பூர்: நுபுர் சர்மாவை ஆதரித்து சமூக வலைதளங்களில் கருத்து பகிர்ந்ததாக கொலை செய்யப்பட்ட ராஜஸ்தான் டெய்லரின் மகன்களுக்கு அரசு வேலை வழங்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.
Recommended Video
நபிகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறியிருந்தது பெரிதும் அதிர்ச்சியை கிளப்பியது.. இது இந்தியா மட்டுமல்லாது, உலகம் முழுவதிலுமுள்ள இஸ்லாமியர்களிடமிருந்தும் பெரும் கண்டனத்துக்குள்ளானது.
இதைத் தொடர்ந்து, அவர் பாஜகவில் இருந்து நீக்கப்பட்டார். இதனிடையே அவரை ஆதரித்து சமூக வலைதளங்களில் சிலர் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.

தீக்கிரை
"ஒரு தேசிய ஊடகத்தில் பேசக்கூடிய நபர், இப்படி பொறுப்பில்லாமல் நடந்துகொண்டதும், அதன்மூலம் ஏற்பட்ட விளைவும், ஒட்டுமொத்த நாட்டையும் தீக்கிரையாக்கிவிட்டது.. நாட்டு மக்களிடம் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று சுப்ரீம் கோர்ட்டும் நுபுர் ஷர்மா வழக்கு தொடர்பாக கண்டித்து இருந்தது... ஆனாலும் மக்களிடம் அந்த கொந்தளிப்பு அடங்கவில்லை. தொடர்ந்து கண்டனங்களையும் எதிர்ப்புகளையும் பதிவு செய்து கொண்டே இருக்கிறார்கள்... மற்றொரு புறம் நுபுர் ஷர்மாவுக்கு ஆதரவுகளும் தரப்பட்டு வருகின்றன.

டெய்லர்
அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம், உதய்பூர் மாவட்டத்தில் உள்ள மால்டாஸ் பகுதியை சேர்ந்த டெய்லர் கன்னையா லால் என்பவர், நுபுர் ஷர்மாவுக்கு ஆதரவு தந்திருந்தார்.. அத்துடன் வீடியோ ஒன்றையும் சோஷியல் மீடியாவில் வெளியிட்டிருந்தார்.. அதில், கடந்த 28ம் தேதி மதியம் இவருடைய கடைக்கு பைக்கில் 2 இளைஞர்கள் வந்தனர். அவர்களில் ஒருவன், செல்போனில் படம் பிடிக்க, மற்றொருவன் கடைக்குள் சென்று துணி தைக்க அளவு எடுக்கும்படி லாலிடம் கூறினான்.

கழுத்தறுத்து கொலை
உடனே அவரும் அளவு எடுக்க தொடங்கியபோது, அந்த இளைஞர் திடீரென தன்னிடம் இருந்த வாளால் கழுத்தை அறுத்தார். அதே இடத்தில் லால் துடிதுடிக்க இறந்தார். இந்த காட்சிகள் முழுவதையும் வெளியே நின்றிருந்த மற்றொரு இளைஞன் வீடியோ எடுத்தான். பிறகு 2 பேரும் ஒன்றாக இணைந்து, பிரதமர் மோடியை தரக்குறைவாக விமர்சித்தும், அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தும் வீடியோ பதிவு செய்து வெளியிட்டனர். இந்த சம்பவத்தை கண்டித்து அப்பகுதி மக்கள் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

அஷோக் கெலாட்
இந்த கொலையை செய்த ரியாஸ் அக்தர், கோஸ் முகமதுவை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். இதனிடையே அம்மாநில முதல்வர் அசோக் கெலாட், கன்னையா லால் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் சொன்னார்.. மேலும் அவர்களுக்கு ரூ.51 லட்சம் நிவாரண நிதி வழங்கினார். அதுமட்டுமின்றி கொலை செய்யப்பட்ட டெய்லர் கன்னையா லால் மகனுக்கு அரசு வேலை கொடுப்பதாகவும் அவர் உறுதி அளித்திருந்தார்.. இந்நிலையில், கொல்லப்பட்ட கன்னையா லாலின் மகன்கள் யாஷ் டெலி, தருண் டெலி ஆகியோருக்கு அரசு வேலை வழங்க ராஜஸ்தான் அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications