ஆணவ கொலை சட்டத்திற்கு ஒப்புதல் தர முடியாது! ராஜஸ்தான் அரசுக்கே திருப்பி அனுப்பிய ஆளுநர்! என்ன காரணம்
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலச் சட்டசபை நிறைவேற்றி அனுப்பிய 10 மசோதாக்களை அம்மாநில ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ளார். இந்த 10 மசோதாக்களில் 9 மசோதாக்கள் முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் நிறைவேற்றப்பட்டதாகும். அதில் குறிப்பாக ஆணவக் கொலைகளைத் தடுக்கும் மசோதா, கும்பல் வன்முறை தொடர்பான மசோதாக்களும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.
மாநில அரசுகளை நிறைவேற்றும் மசோதாக்களைச் சில குறிப்பிட்ட காரணங்களுக்காக திருப்பி அனுப்பும் அதிகாரம் ஆளுநருக்கு இருக்கிறது. தமிழகத்திலும் ஆளுநர் இதுபோல மசோதாக்களைத் திருப்பி அனுப்பியிருக்கிறார். இதற்கிடையே ராஜஸ்தான் மாநில ஆளுநர், சட்டப்பூர்வ மற்றும் அரசியலமைப்பு ரீதியான காரணங்களைச் சுட்டிக்காட்டி அம்மாநில அரசு நிறைவேற்றி அனுப்பிய 10 மசோதாக்களை மாநில சட்டமன்றத்திற்குத் திருப்பி அனுப்பியுள்ளார்.

காங்கிரஸ் அரசின் மசோதாக்கள்
இந்த மசோதாக்களில் ஒன்பது மசோதாக்கள், முந்தைய அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றப்பட்டவை. எஞ்சிய ஒரு மசோதா, முன்னாள் முதலமைச்சர் வசுந்தரா ராஜேவின் 2008 ஆட்சிக் காலத்தைச் சேர்ந்ததாகும். இந்த விவரங்கள் புதன்கிழமை அன்று சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டன.
சட்டம் சொல்வது என்ன
அரசியலமைப்புச் சட்ட விதிகளின்படி, மாநில அரசு நிறைவேற்றும் சட்ட மசோதாவானது ஏற்கனவே உள்ள மத்தியச் சட்டங்களுக்கு முரணாக இருப்பதாகக் கண்டறியப்பட்டால், ஆளுநரால் அதைத் திருப்பி அனுப்ப முடியும். மாநிலப் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள துறைகளில் மட்டுமே மாநில அரசுகளுக்குச் சட்டம் இயற்றும் அதிகாரம் உண்டு. பொதுப் பட்டியலில், மத்திய மற்றும் மாநில அரசுகள் சட்டம் இயற்றலாம். இருப்பினும், சட்டங்களுக்கு இடையில் முரண்பாடுகள் ஏற்படும் சமயத்தில், மத்திய அரசின் சட்டம் மேலோங்கும்; மாநிலச் சட்டங்கள் அதை மீற முடியாது.
இதேபோன்ற ஒரு நிலை முன்பு வசுந்தரா ராஜேவின் ஆட்சிக்காலத்திலும் ஏற்பட்டது. அப்போதைய ஆளுநர் பிரதிபா பாட்டிலால் மத சுதந்திர மசோதா திருப்பி அனுப்பப்பட்டது. அந்த மசோதா பின்னர் மறுசீரமைக்கப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. ஆனால், பல ஆண்டுகளாக அது நிலுவையிலேயே இருந்து வருகிறது.
ஆணவக் கொலைகள்
சட்டமன்றத்தில் வைக்கப்பட்ட தகவல்களின்படி, 2019ஆம் ஆண்டு ஆணவக் கொலைகள் தொடர்பான மசோதாவைத் திருப்பி அனுப்பும்போது, ஆளுநர் சில முக்கிய சட்டச் சிக்கல்களைச் சுட்டிக்காட்டினார். இந்த மசோதா இந்தியத் தண்டனைச் சட்டம் (IPC) 1860 மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் (CrPC) 1973 ஆகியவற்றைக் குறிப்பிட்டது. ஆனால், இந்த பழைய சட்டங்கள் தற்போது மாற்றப்பட்டுவிட்டன. புதிய பாரதிய நியாய சம்ஹிதா, 2023-ன் பிரிவு 103, ஆணவக் கொலைக் குற்றங்களைத் தீர்ப்பதற்கான போதுமான விதிகளைக் கொண்டுள்ளது என ஆளுநர் குறிப்பிட்டார். இதுவே இந்த மசோதாவை ஆளுநர் திரும்ப அனுப்ப முக்கிய காரணமாக அமைந்தது.
சமூக நீதி மசோதாக்கள்
முந்தைய கெலாட் அரசின் ஆட்சிக்காலத்தில் நிறைவேற்றப்பட்ட 9 மசோதாக்களை ஆளுநர் திருப்பி அனுப்பி இருக்கிறார். அதில் கும்பல் வன்முறைக்கு எதிராக 2019ல் நிறைவேற்றப்பட்ட பாதுகாப்பு மசோதா மற்றும் கௌரவம், பாரம்பரியம் என்ற பெயரில் திருமண உறவுகளில் தலையிடுவதைத் தடுக்கும் ராஜஸ்தான் மசோதா 2019 ஆகியவை அடங்கும். இவை சமூக நீதி தொடர்பான முக்கிய மசோதாக்களாகும்.
மேலும், 2020 நவம்பரில் நிறைவேற்றப்பட்ட மூன்று விவசாயம் தொடர்பான திருத்த மசோதாக்கள், 2022இல் அங்கீகரிக்கப்பட்ட இரண்டு தனியார் பல்கலைக்கழக மசோதாக்கள் மற்றும் 2023 ஆகஸ்டில் நிறைவேற்றப்பட்ட ராஜஸ்தான் மின்சார (கட்டண) மசோதா 2023, நாதத்வாரா கோயில் (திருத்த) மசோதா 2023 ஆகியவையும் ஆளுநரால் மறுபரிசீலனை செய்யத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications