ஐசியுவில் ஆக்சிஜன் பொருத்தப்பட்ட பெண்ணை கைகளை கட்டி போட்டு, பலாத்காரம் செய்த வார்டுபாய்
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் தலைநகர் ஜெய்ப்பூரில் உள்ள ஷால்பி என்ற ஆஸ்பத்திரியில், ஐ.சி.யுவில் ஆக்ஸிஜன் பொருத்தப்பட்டு சிகிச்சைப்பெற்று வந்த ஒரு பெண்ணை வார்டுபாய் திங்கள்கிழமை இரவு பாலியல் பலாத்காரம் செய்த கொடூரமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இநத் சம்பத்தில் தொடர்புடைய வார்டுபாயை கைது செய்துள்ளோம். சிசிடிவி காட்சிகளை வைத்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம் என்று ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தெரிவித்தனர்.
ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் உள்ள ஷால்பி மருத்துவமனையில் பெண் ஒருவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது, (என்ன அறுவை சிகிச்சை என்பது குறித்த தகவல்கள் இல்லை). அறுவை சிகிச்சைக்கு பின்னர் அவர் ஐ.சி.யுவிற்கு மாற்றப்பட்டார். அவருக்கு ஆக்சிஜன் செலுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

பெண் நோயாளி
இந்நிலையில் ஷால்பி மருத்துவமனையில் பணியாற்றி வரும் வார்டுபாய் ஐ.சி.யுவில் அனுமதிக்கப்பட்ட பெண் நோயாளியை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். ஐ.சி.யுவில் சிகிச்சைப்பெற்று வந்த அந்த பெண் நோயாளி, இந்த கொடூர சம்பவத்தின்போது ஆக்சிஜன் செலுத்தப்பட்ட நிலையில் இருந்ததுடன், அவரது கைகளும் கட்டப்பட்டிருந்திருக்கிறது.

மிரட்டியிருக்கிறார்
இந்த சம்பவத்திற்குப் பிறகு, பாதிக்கப்பட்ட பெண் இரவு முழுவதும் அழுதுகொண்டே இருந்தனர். இந்த சம்பவம் குறித்து அந்த பெண் ஒரு செவிலியருக்கு தெரிவிக்க முயன்றபோது, வார்டுபாய் அந்த பெண்ணை மிரட்டியதாக இந்தி நாளேடான டைனிக் பாஸ்கர் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்ன நடந்தது
பின்னர், பாதிக்கப்பட்ட பெண் தனது கணவரிடம் காலையில் தனக்கு நடந்த கொடுமையை விவரித்தார். தனது மனைவிக்கு என்ன நடந்தது என்பது குறித்து அவரது கணவர் கூறுகையில், உடல்நிலை சரியில்லாமல் போனதால் ஷால்பி மருத்துவமனைக்கு என் மனைவியை கொண்டு சென்றேன்.. அங்கு, அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

காலையில் வந்தார்
அப்போது அங்கிருந்த மருத்துவமனை ஊழியர்கள், உறவினர்கள் நோயாளியுடன் இரவில் தங்க முடியாது என்று கூறினார்கள். இதனால் வீட்டுக்கு நான் திரும்பி சென்றுவிட்டேன். பின்னர் காலையில் திரும்பி வந்ததேன். அப்போது என் மனைவி அழுதபடி தனக்கு நடந்த கொடுமைகளை எழுதினார் என்றார்.

வார்டுபாய் கைது
இதனிடையே தன் மனைவிக்கு ஏற்பட்ட கொடூரத்தை பெண்ணின் கணவர் சித்ரகூட் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் டூட்டி ரோஸ்டர் மற்றும் சிசிடிவி காட்சிகளை பரிசோதித்து குற்றவாளிகளை அடையாளம் காண விசாரணை செய்தார்கள். அதன்பின்னர் குற்றம் சாட்டப்பட்ட வார்டுபாயை கைது செய்தார்கள்.

யார் அவர்
இதுபற்றி ராஜஸ்தான் காவல்துறை டிசிபி பிரதீப் மோகன் சர்மா கூறுகையில் இந்த சம்பவத்தில் மற்றவர்களின் தலையீடு குறித்து நாங்கள் சி.சி.டி.வி.யைப் பார்க்கிறோம். குற்றம் சாட்டப்பட்ட வார்டுபாய் கரோலி மாவட்டத்தில் நாடோதி தெஹ்ஸில் வசிக்கும் குஷிராம் குஜ்ஜார் என அடையாளம் காணப்பட்டுள்ளார் " என தெரிவித்தார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications