வனத்தில் ‛‛உல்லாசம்’’.. கள்ளக்காதல் ஜோடி மீது பசையை ஊற்றி கொன்ற கொடூரம்.. மந்திரவாதி ‛ஷாக்’ செயல்
உதய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் வனப்பகுதியில் உல்லாசமாக இருந்த கள்ளக்காதல் ஜோடியின் மீது உடலில் 50 சூப்பர்க்ளூ(பெவிக்குவிக் வகை பசை) பாக்கெட்டுகளை ஊற்றி அவர்களை பிரிய விடாமல் தடுத்து மர்மஉறுப்பை அறுத்து கொலை செய்த பயங்கர சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பாக மந்திரவாதியை போலீசார் கைது செய்துள்ள நிலையில் கொலைக்கு பின்னணியில் உள்ள காரணம் ஷாக்கை ஏற்படுத்தி உள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூர் அருகே கவுபாவதி வனப்பகுதி உள்ளது. இந்த வனப்பகுதியில் கடந்த 18 ம் தேதி ஒரு ஆணும், பெண்ணும் நிர்வாணமான நிலையில் இறந்து கிடந்தனர்.
இவர்கள் 2 பேரின் உடலிலும் காயங்கள் இருந்தனர். இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இருவரின் உடலையும் கைப்பற்றி விசாரித்தனர்.

கள்ளக்காதல் ஜோடி
இந்த விசாரணையில் இறந்தவர் உதய்ப்பூரை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியரான ராகுல் மீனா (வயது 30) என்பதும், சோனு குன்வார் (28) என்பதும் தெரியவந்தது. மேலும் இருவரும் தனித்தனி நபர்களை திருமணம் செய்த நிலையில் கள்ளத்தொடர்பில் இருந்தது தெரியவந்தது. மேலும் அவரை யாரோ திட்டமிட்டு கொலை செய்து இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் தீவிரமாக விசாரித்தனர்.

மந்திரவாதி கைது
இந்த விசாரணையின் அடிப்படையில் இருவரையும் கொலை செய்ததாக பாதவிகுடா பகுதியில் உள்ள இச்சபூர்ணா இச்சபூர்ணா ஷேஷ்நாக் பாவ்ஜி மந்தரின் பூஜாரியும், பொதுமக்களிடம் மந்திரவாதி எனவும் கூறி வந்த 55 வயது நிரம்பிய நபர் பாலேஷ் குமாரை கைது செய்தனர். இவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

கள்ளக்காதல் உருவானது எப்படி?
ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூர் அருகே பாதவி குடா பகுதியில் இச்சபூர்ணா ஷேஷ்நாக் பாவ்ஜி மந்திர் உள்ளது. இங்கு மந்திரவாதியாக பாலேஷ் குமார் உள்ளார். இங்கு ராகுல் மற்றும் சோனு குன்வார் ஆகியோரின் குடும்பம் அடிக்கடி சென்று வந்தனர். இதையடுத்து ராகுல்-சோனு குன்வார் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியது.

குடும்பத்தில் பிரச்சனை
இதையடுத்து ராகுல் தனது மனைவியிடம் தகராறு செய்தார். இந்நிலையில் தான் குடும்பத்தில் நிலவும் பிரச்சனையை தீர்த்து வைக்க வேண்டும் என ராகுலின் மனைவி மந்திரவாதியான பாலேஷ் குமாரை அணுகினார். இந்த வேளையில் தான் மந்திரவாதி பாலேஷ் குமாருக்கு ஒன்றை அறிந்தார். அதாவது ராகுலுக்கும், சோனுவுக்கும் கள்ளத்தொடர்பில் இருப்பதை அவர் கண்டறிந்தார். இதுபற்றி பாலேஷ் குமார், ராகுலின் மனைவியிடம் கூறி இதுதான் பிரச்சனைக்கு காரணம் என அவர் தெரிவித்தார். இதனால் ராகுலிடம் அவரது மனைவி சண்டையிட்டார்.

மந்திரவாதியுடன் தகராறு
இதனால் ராகுல் அவரது மனைவி இடையேயான பிரச்சனை உச்சக்கட்டத்துக்கு சென்றது. மேலும் மந்திரவாதி பாலேஷ் குமார் தான், தனது கள்ளக்காதல் விவகாரத்தை மனைவியிடம் கூறியதை ராகுல் கண்டுபிடித்தார். இதுபற்றி ராகுல் தனது கள்ளக்காதலி சோனுவிடம் கூறினார். இதையடுத்து ராகுலும், சோனுவும் சேர்ந்து மந்திரவாதி பாலேஷ் குமாரை கடுமையாக திட்டினர். மேலும் குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி விட்டதாக குற்றம்சாட்டியதோடு பழிவாங்குவதாக தெரிவித்தனர்.

கள்ளக்காதல் ஜோடியுடன் பேச்சு
இதனால் மந்திரவாதி பாலேஷ் குமார் கோபத்தின் உச்சிக்கு சென்றார். மேலும் ராகுல்-சோனு கள்ளக்காதல் ஜோடியை கொலை செய்ய அவர் முடிவு செய்தார். இதற்காக அவர் சதித்தீட்டம் தீட்டினார். அதன்படி குடும்பத்தில் உள்ள பிரச்சனையைக்கு ஏற்படுத்தியது பற்றி பேச வேண்டும் என இருவரையும் அவர் அழைத்தார். இதையடுத்து ராகுல்-சோனு ஜோடி நம்பினர்.

வனப்பகுதியில் உல்லாசம்
அதன்படி இருவரையும் மந்திரவாதி பாலேஷ் குமார் கவுபாவதி வனப்பகுதிக்கு அழைத்து சென்றார். அங்கு தனது முன்னிலையில் இருவரும் உடலுறவு கொள்ளுங்கள் என அவர் கூறினார். இவ்வாறு உடலுறவு கொள்ளும்போது புனித நீர் ஊற்றுவேன். இதன்மூலம் பிரச்சனைக்கு தீர்வு ஏற்படும் என கூறியதாக சொல்லப்படுகிறது. இதை நம்பிய ராகுல்-சோனு வனப்பகுதியில் உல்லாசம் அனுபவித்தனர்.

பெவிக்குவிக் வகை பசை
இந்த வேளையில் புனித நீர் என்பதற்கு பதில் ‛பெவி க்விக்' வகையை சேர்ந்த ‛சூப்பர்க்ளூ' எனும் பசையை மந்திரவாதி பாலேஷ் குமார் இருவரின் மீதும் ஊற்றினார். உடலில் துணிகள் இல்லாத நிலையில் இருவரின் உடலும் ஒன்றொடொன்று ஒட்டிக்கொண்டது. இருவரும் உடல்களை பிரிக்க முயன்றபோது தோல் கிழிய தொடங்கியது. உடலில் காயங்கள் ஏற்பட்டன. இதனால் அவர்களால் உடல்களை பிரிக்க முடியாத நிலையில் சிரமப்பட்டனர். மேலும் வலி தாங்க முடியாமல் அவர்கள் கதறினர்.

தவறான மந்திரவாதி கணக்கு
இந்த வேளையில் மந்திரவாதி பாலேஷ் குமார் ராகுலின் கழுத்தை அறுத்தார். மேலும் சோனுவை கத்தியால் குத்தினார். இதனால் இருவரும் பரிதாபமாக இறந்தனர். இதையடுத்து மந்திரவாதி பாலேஷ் குமார் அங்கிருந்து தப்பினார். இந்த சம்பவம் நவம்பர் 15ல் நடந்துள்ளது. ஏற்கனவே ராகுலின் வீட்டில் கள்ளக்காதல் விவகாரத்தில் பிரச்சனை உள்ளது. இதனால் ராகுல் தனது கள்ளக்காதல் ஜோடி சோனுவுடன் சேர்ந்து தற்கொலை செய்து இருக்கலாம் என போலீசார் கருதுவார்கள். இதன்மூலம் தான் தப்பித்து விடலாம் என மந்திரவாதி பாலேஷ் குமார் நினைத்தார். ஆனால் இந்த கனவு தவறானது. இதையடுத்து பாலேஷ் குமாரை போலீசார் கைது செய்தனர்.

எஸ்பி கூறுவது என்ன?
இதுபற்றி உதய்ப்பூர் எஸ்பி விகாஸ் குமார் கூறுகையில், ‛‛வனப்பகுதியில் இருவரின் உடலும் கிடந்த நிலையில் அதனை சுற்றிய பகுதிகளில் பொருத்தப்பட்டு இருக்கும் 50 சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டன. இந்த ஆய்வின் அடிப்படையில் 200 பேரை விசாரித்து மந்திரவாதி பாலேஷ் குமாரை கைது செய்துள்ளோம். தற்போது அவரிடம் 3 நாள் போலீஸ் காவலில் விசாரணை நடத்தி வருகிறோம்'' என்றார். இந்த சம்பவம் ராஜஸ்தானில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications